சென்னை, ஏப்.28- வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த கட்டுகட்டான பணம் சிக்கியதை அடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென வேலூரில் சத்துவாச்சாரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு அடிப்படையில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.