கோவை, நவ.30- 1 முதல் 10 வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை 9, 10 வகுப்புக்கு மட்டுமே என அறிவித்த ஒன்றிய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர் களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வந்த ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை, இனி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு களுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறாக சிறுபான்மை மாண வர்களின் கல்வி வாய்ப்பின் மீது மோடி அரசு தாக்குதலை தொடுத் துள்ளது. சிறுபான்மை மாணவர்களுக் கான ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் மூலம், மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வரும் சிறுபான்மை மாணவர்கள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால், தற்போது அந்த திட்டத்தை சுருக்கி, 9, 10 ஆம் வகுப்பு களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை கிடைக்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு அநீதியை நிகழ்த்தியுள்ளது. எனவே, உடனடியாக ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோவை பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ச.அசாருதீன் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செய லாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் கயல் விழி, மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.