districts

img

குடியரசு தலைவர் கோவை வருகை கடும்பனியால் சாலை வழியாக உதகைக்கு பயணம்

கோயம்புத்தூர், நவ.27- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். தில்லியில் இருந்து புதனன்று விமான மூலம் காலை 9.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

அவரை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் வரவேற்றனர்.  கோவை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், உதகையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பயணதிட்டம் மாற்றப்பட்டு சாலை மார்க்கமாக உதகை சென்றார்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக உதகை சென்ற நிலையில், இந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மூன்று நாட்கள் உதகையில் ராஜபவன் இல்லத்தில் தங்கும் அவர், அங்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.