நாமக்கல், மார்ச் 23- திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்தில் காவல் உதவி செயலி பதிவிறக்கங்களுக்கான வெற்றி விழா நடை பெற்றது. “காவல் உதவி” என்ற வார்த்தையின், மிகப்பெரிய மனித உருவாக்கும் நிகழ்வை நாமக்கல் மாவட்ட காவல் துறையும், கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களும் இணைந்து, அக்கல்லூரி வளாகத்தில் சனியன்று ஏற்பாடு செய்திருந்தன. 30 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் இந்த உருவாக்கத்தில் கலந்து கொண்டு காவல் துறைக்கு தங்கள் சமூகப் பொறுப்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். மிகப்பெரிய மனித உருவாக்க முயற்சி ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கேஎஸ்ஆர் கல்வி நிறு வனத்தின் தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் சச்சின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.