districts

img

விவசாய அனுபவ நிலத்தில் வனத்துறையினர் மரக்கன்று நடும் நடவடிக்கையை கைவிடக்கோரி மனு

தருமபுரி, செப்.25- பெரும்பாலை அருகே மேட்டூர் அணைக்கு நிலம் வழங்கியவர்கள் வசிக்கும் பகுதியில் வனத்துறை யினர் மரக்கன்று நட குழி வெட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும்  என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்த னர். மேட்டூரில் அணை கட்டுவதற் காக அந்த இடத்தில் வசித்து மக் களை அப்புறப்படுத்தி, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பெரும்பாலை அருகே உள்ள சாமத் தாள், கொம்பாடியூர் உள்ளிட்ட இடங் களில் அரசு சார்பில் இடம் ஒதுக்கப் பட்டு, குடியமர்த்தப்பட்டது. இந் நிலையில், சுமார் 100 ஆண்டுகள், நான்கு தலைமுறையாக இந்த பகு தியில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களுக்கு சுமார் ஒன்று முதல் 3 ஏக்கர் வரை நிலம் வைத்து  விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், இந்த மக்களுக்கு அரசு சார் பில் இலவச வீடு, குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவ ணங்களும் இந்த முகவரியில் வழங் கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வனத் துறை சார்பில் மரக்கன்று நடுவதற் காக குழிகள் வெட்டப்பட்டு வருகி றது. இதில் இப்பகுதியில் உள்ள மக் கள் வசிக்கின்ற விவசாய நிலங்களி லும், மரக்கன்று வைப்பதற்காக வனத் துறையினர் குழி தோண்டி வருகின் றனர். இந்நிலையில், அரசு ஆவணங் களிலும் தங்களிடமும் இந்த இடத் திற்கான உரிய ஆவணங்கள் இருந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் வசிக்கும் மக்களை, இந்த இடத்தில் விவசாயம் செய்யவும், வசிக்கவும் இடையூறு செய்யாமல் இருக்க  வேண்டும் என வனத்துறையினரி டம் அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்தனர். ஆனால், வனத்துறையி னர் இந்த இடம் முழுவதும் வனத் துறைக்கு சொந்தமானது. இங்கே  வன விரிவாக்கம் செய்யப்படுவதால் இந்த இடத்தை விட்டு, வேறு இடத் திற்கு செல்லுமாறு தெரிவித்துள்ள னர். இதனால் அதிர்ச்சியடைந்த சாமத் தாள் மற்றும் கொம்பாடியூர் கிராம மக்கள், நூறாண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்திலிருந்து வெளி யேற்றம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இதனால் தங்க ளது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இரண்டு கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.