பொள்ளாச்சி, டிச. 26- பொள்ளாச்சி சுற்றுவட்டார பகு தியில் வசித்து வரும் ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என் பதை வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள வட சித்தூர், சிங்காநல்லூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறது. தலைமுறை தலை முறையாக அத்தக்கூலிகளாக, விவ சாய தொழிலை செய்து வருகின்ற னர். ஒண்டிக்குடித்தனம் கூட இல் லாத நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் இத்தொழிலாளர்க ளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை முன்வைத்து போராடி வருகிறது. இதன்ஒருபகுதியாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரி யங்காவிடம் விவசாய தொழிலாளர் களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு திங்களன்று மனு அளித்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக இந்த மனு அளிக்கும் இயக்கத்தில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆனந்தராஜ், செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வரன், பொருளாளர் வெள்ளிங்கிரி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, கே.ரவி, வட சித்தூர் கவுன்சிலர் எம்.கார்த்திகே யன், மாசிலமணி உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர்.