முள்வேலிக்கிடையேயும், சாக்கடைக்குள்ளும் உடலை சுமந்து செல்கிற அவலம்
கோவை மாநகராட்சிக்குட் பட்டு அமைந்துள்ள பகுதி விளாங்குறிச்சி. இங்கு திருவள் ளூவர் வீதி, திருவிக வீதி, காரல் மார்க்ஸ் வீதி, லெனின் வீதி, தியாகி சிவராம் நகர், வஉசி நகர், அம்பேத்கர் நகர், காந்திநகர், பாரதி வீதி என அனைத்து வீதி களுக்கும் தமிழக, தேசிய, சர்வ தேச தலைவர்களின் பெயர் களை தாங்கி இருக்கிறது. இந்த பெயர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வகையில் பல கார ணங்கள் விளாங்குறிச்சிக்கு உண்டு என்றாலும், அவை அனைத்தையும் கேள்விக்குள் ளாக்கும் வகையில் அமைந் துள்ளது தலித் மக்களின் சுடு காட்டுப் பாதை. இங்குள்ள தலித் மக்கள் மயானப் பாதையின்றி காட்டிலும்,முள்வேலிக்கிடையேயும், சாக்கடைக்குள்ளும் உடலை சுமந்து செல்கிற அவலம் தற்போது வரை அரங்கேறி வருகிறது.
கோவை மாநகராட்சி 32 ஆவது வார்டுக்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது லெனின் வீதி மற்றும் அம்பேத்கர் நகர். இங்கு தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி எல்லைக்கு உட் பட்ட இந்த விளாங்குறிச்சியில் தலித் மக்களுக்கு என்று தனி மயானமும், ஆதிக்க சாதியி னருக்கு தனி மயானமும் என இரட்டை சுடுகாடு அமைந் துள்ளது. இதில் ஆதிக்க சாதி யினர் தங்கள் சமூகத்தில் இறந் தவர்களின் உடல்களை மயானத் திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய உரிய சாலை வசதியும், உடல்களை எரியூட்ட கூரை வசதியும் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல எவ்வித அடிப் படை வசதிகளும் இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை தனியார் தோட்டங்கள், சாக்கடை ஓடைகள், முட்புதர் களின் வழியாக தலித் மக்கள் தூக்கி சென்று அடக்கம் செய்யும் அவலம் இன்றளவும் இருந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், எங்கள் ஊரில் தற் போது வரை இரட்டை சுடுகாடு தான். இதர பகுதியினர் பயன் படுத்தும் சுடுகாட்டில் புதைப் பதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்ப எங்களிடம் தெம்பு இல்லை. ஆனால், எங்கள் உறவுகள் இறந்து போனால் அதனை புதைக்க எங்களுக்கான சுடு காட்டிற்கு கொண்டு செல்ல வாவது பாதை வேண்டும் என்று தான் கேட்கிறோம். இதுதொடர் பாக பல முறை மாவட்ட நிர்வா கத்திடமும், கோவை மாநக ராட்சி நிர்வாகத்திடமும் முறை யிட்டுள்ளோம். உங்கள் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது.
இன்னும் பத்து நாட்களில் சரி செய்வோம் என்று சொல்லிச் சொல்லியே பல வருடம் கடந்து விட்டது. இப் போது மழைக்காலம் என்பதால் சாக்கடையில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது. இதனை கடந்துதான் பிணத்தை சுமந்து செல்கிறோம். பிற சமூகத்தவரின் மயானத் திற்கு செல்ல வசதிகள் செய்து கொடுத்துள்ளதை போல தாழ்த் தப்பட்ட சமூகத்தவரின் மயானத் திற்கு செல்ல உரிய சாலை வசதி, கூரை வசதி உட்பட அடிப்படை வசதிகளை மட்டும் செய்து கொடுத்தால் போதும். மயானத் திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் இருப்பதால் இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்யக் கூட பத்துக் கும் குறைவானவர்களே செல் கிறோம். இறந்தவர்களின் இறுதி பயணம் கூட இம்சை யோடுதான் செய்ய வேண்டிய தாக உள்ளது என்கின்றனர் வேதனையோடு.
அ.ர.பாபு