districts

img

திருப்பூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாலிபர் சங்கம் நடத்திய மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா

திருப்பூர், ஜன.15 - திருப்பூர் மாவட்டத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சுமார் 25  இடங்களில் மக்கள் ஒற்றுமை பொங்கல்  விளையாட்டு விழா நடத்தப்பட்டது.  தை முதல் நாளான செவ்வாய்க்கி ழமை பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. அத்துடன்  வேலம்பாளையம் பி.டி.ஆர்.நகர், ஊத் துக்குளி தாலூகா பாப்பம்பாளையம், கரட்டுப்புதூர், காங்கேயம், உடுமலை ஒன்றியம் உரல்பட்டி, குரல்குட்டை ஆகிய ஊர்களில் காலை நேரத்தில்  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்க ளுக்கான போட்டிகள் நடத்தி வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.  அதேபோல் செவ்வாய்க்கி ழமை மாலை பல்லடம் ஒன்றியம் காளி வேலாம்பட்டி, திருப்பூர் தெற்கு ஒன்றி யம் இடுவாய், திருப்பூர் தெற்கு மாநக ரம் கருவம்பாளையம், பூச்சக்காடு, பூம் புகார், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் சிவசக்தி நகர், வடக்கு ஒன்றியம் பெரு மாநல்லூர் ஆகிய இடங்களில் பொங்கல் விளையாட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. மாதர் சங்கத்தினர் பங் கேற்று விடுதலை கும்மியாட்டம் நடத்தி னர். மக்கள் ஒற்றுமை பொங்கல் விழாக் களில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் செ.முத்துக் கண்ணன், மாவட்டச் செயலாளர் மணி கண்டன், மாவட்டத் தலைவர் எஸ்.அருள், மாவட்டப் பொருளாளர் கு.பால முரளி, துணை நிர்வாகிகள் பாலசுப்ர மணி, ராம்கி, சிந்தன், சந்தோஷ், முரு கேஷ், நவீன், வடக்கு ஒன்றியத் தலை வர் ஜி.ரேவந்த், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.காளியப்பன், முன்னாள் வடக்கு ஒன்றியச் செயலாளர் எ.சிகா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். பி.டி.ஆர்.நகர் பொங்கல் விழாவில்  திரைப்பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் பவித்ராதேவி, பொருளாளர் ஆர்.கவிதா, மாவட்ட நிர்வாகிகள் ஜி. சாவித்திரி, ஏ.சகிலா, பானுமதி, அங்கு லட்சுமி, மினி, செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் தெற்கு ஒன்றியம் முதலிபா ளையம் சிட்கோ கிளை வாலிபர் சங்கத்தின் சார்பில் வெள்ளி விழா ஆண்டு மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெற்றது. மேலும் பாரதிபு ரம், குப்பண்டாம்பாளையம், அவிநாசி  வடக்கு கிளை, காங்கேயம் தீத்தாம்பா ளையம், உடுமலை ஒன்றியம் ஜல்லி பட்டி, மடத்துக்குளம், திருப்பூர் வடக்கு  மாநகரம் ஓடக்காடு பகுதியில் சமத்துவ  பொங்கல் வைக்கப்பட்டது.இதில்,  வடக்கு மாநகரத் தலைவர் எஸ். கண்ணன், மாநகரச் செயலாளர் எஸ். விவேக் உட்பட பலர் பங்கேற்றனர். தெற்கு நகரம் தென்னம்பாளையம், மிஷின் வீதி வடக்கு மாநகரம் உள்ளிட்ட  இடங்களில் விளையாட்டுப் போட்டிகள்  நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.  அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் குறிப்பாக பெண்கள், இளை ஞர்கள், சிறுவர் சிறுமிகள் இந்த விழாக் களில் உற்சாகமாக கலந்து கொண்ட னர்.  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் சார்பில் அவிநாசி கமிட்டி  திருமுருகன் பூண்டியில் முதல்முறை யாக சமத்துவ பொங்கல் வைக்கப்பட் டது. பேரூராட்சி கவுன்சிலர் சுப்பிர மணி, முன்னாள் கவுன்சிலர் சிவகாமி, மாதர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வி  மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.  வேலம்பாளையம் கமிட்டி பெரியார் காலனி கிளைகளின் சார்பில் சமத்துவ  பொங்கல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச் சியில் நகரச் செயலாளர் கவிதா, கிளை  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.