தமிழர்களின் வாழ்வியலை, உழ வுக்கும், உழைப்பை செலுத்துபவர்க ளுக்கும் நன்றி நவிலும் பொங்கல் திரு விழா தமிழகமெங்கும் பெரும் உற்சா கத்தோடு கொண்டப்பாட்டது. அனைத்து உயிர்களையும் கொண்டா டும் தமிழர்களின் பெருவிழாவான, தனித்துவமான பொங்கல் விழா, தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சிறுபான்மை மக்கள் நலக்குழு உள்ளிட்ட அமைப்பு களின் சார்பில், மக்கள் ஒற்றுமை சமத்து வப் பொங்கல் விழா வெகு விமர்சையோடு கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக, மக்களை பிரிக்கும் பாசிசத்தை வீழ்த்தி, இந்திய ஒற்று மையை பாதுகாப்போம். தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாப் போம் என்கிற சூளுரையோடு பொங் கல் விழா நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இடங் களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் மக்கள் ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி, கோவை மாவட்டத்தில் தண்ணீர்பந்தல், நேரு வீதி, இடிகரை, கீரணத்தம், அம்பேத்கர் நகர், கண்ணப் பாநகர், கெம்பட்டி காலனி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் ஒற்றுமை பொங்கலை கொண்டாடினர். செவ்வாயன்று துவங்கிய மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா வியாழக் கிழமை வரை என மூன்று நாட்கள் நடை பெறுகிறது. வாலிபர் சங்க மேற்கு நகரக் குழு சார்பில் நடைபெற்ற பொங் கல் விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் வெண்கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், சிபிஎம் மேற்கு நகரக்குழு செயலாளர் பி.சி.முருகன், வாலிபர் சங்கத்தின் நிர் வாகிகள் பங்கேற்றனர். பெரியநாயக்கன்பாளையம் ஒன் றியத்துக்குட்பட்ட அப்பநாயக்கன் பாளையம் கிளையில் 36 ஆவது பொங்கல் விளையாட்டு விழாவில், வாலிபர் சங்க முன்னாள் தலைவர் எம்.கோகுல கிருஷ்ணன் கொடியேற்றி னார். வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் ந.ராஜா வாழ்த்துரை வழங்கி னார். சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட ஏரா ளமானோர் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். சிவானந்தபுரம் கிளையின் 24 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா சமத்துவ பொங்கல் பொங்கல் விழா கிளைச்செயலாளர் டி.பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.தெய்வேந்திரன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ்ராஜா, ஒன்றியப் பொருளாளர் வி.சுரேஷ்குமார் மற்றும் செல்லக்குட்டி, கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடை பெற்றது. இதில், மருத்துவர் ஆர்.குரு சாமி பங்கேற்று பரிசளித்து கௌர வித்தார்.
அன்னூர் ஏ.எம் காலனியில் உள்ள தெற்கு பள்ளி முன்புறம் நடைபெற்ற பொங்கல் தின மக்கள் ஒற்றுமை கலை விழா 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில், சமத்துவப் பொங் கல் வைக்கப்பட்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தை கள் மற்றும் பெரியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தப்பாட் டம், மயிலாட்டம் ஒயிலாட்டம் உள் ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன. இந்நிகழ்ச்சியின் இடையே தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர் சங்கத்தின் கோவை மாவட்டச் செய லாளர் கரீம் சிறப்புரை நிகழ்த்தினார். வாலிபர் சங்கத்தின் கிளைத் தலைவர் நாகராஜ், செயலாளர் மனோ விமல், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் தாலுகாச் செயலாளர் மணி கண்டன், அன்னூர் பேரூராட்சி தலை வர் பரமேஸ்வரன், முன்னாள் பேரூ ராட்சித் தலைவர் சௌந்தர்ராஜன் ஆகி யோர் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டனர். சூலூர் நடுப்பாளையம் பகுதியி லும் வாலிபர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற பொங்கல் விழாவிலும் விளை யாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோன்று கோவையில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் மாவட் டச் செயலாளர் அர்ஜூன், பொருளா ளர் தினேஷ்ராஜா, மாவட்ட நிர்வாகி கள் ராஜா, முத்து முருகன், நிசார் அகமது, ஸ்ரீதர், சக்திவேல், குருசாரதி, பிரவீன் குமார், ரமேஷ், பிரதீப், ரத்தில், மனோஜ், விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மாதர் சங்கம் ஆவாரம்பாளையம் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவப் பொங் கல் விழா புதனன்று நடைபெற்றது. இதில், ஏராளமான மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ் வின்போது அப்பகுதியில் புதிதாக நடப் பட்ட கொடிக்கம்பத்தில் மாதர் சங்க கொடி ஏற்றிவைக்கப்பட்டது. மாதர் சங்க நிர்வாகி அமுதா கொடியினை ஏற்றி வைத்தார்.
சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சமத்துவப் பொங்கல் விழா
கோவை மாவட்டம், இரத்தினபுரி யில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் இரத்தினபுரி மகளிர் கூட்டமைப்பு இணைந்து புதனன்று, இரத்தினபுரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பெண்க ளுக்கான கோலப்போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான லக்கி கார்னர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் நடைபெற்ற பரிச ளிப்பு நிகழ்விற்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். பாரதி இசைக்குழு வின் நாட்டுப்புறபாடல் – கலைநிகழ்ச்சி கள், இ.வெ.வீரமணி - தஞ்சை தமிழ் வாணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஏ. சாதிக் பாட்சா, வழக்கறிஞர் டி.சுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட் டம் டிஎஸ்எம்எஸ் மேலாளர் டி.நித்யா, தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட் டத் தலைவர் எம்.ஜெரோம் ரோட்ரிக்ஸ், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல் லூரி பேராசிரியர் எ.அனுராதா ஆகி யோர் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசி னர்.
மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்
பொங்கல் பண்டிகையை முன் னிட்டு கோவை மாவட்டம், ஆனை மலை வட்டத்திற்குட்பட்ட நாகரூத் 1 மற்றும் நாகரூத் 2 ஆகிய மலைவாழ் பழங்குடி கிராமங்களில் பொங்கல் விழா புதனன்று உற்சாகமாக கொண் டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கலந்து கொண்டு மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடினார். மேலும், இரு கிராமங் களை சேர்ந்த 84 குடும்பத்தினருக்கு வேட்டி மற்றும் சேலைகளை ஆட்சியர் வழங்கினார். இதனை தொடர்ந்து அதே பகுதியில் பழங்குடி நலத்துறை மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் ஆட்சி யர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, ஆனைமலை வட் டாச்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடி நலத்துறை தனி வட்டாச்சியர் மற் றும் வனத்துறையினர் கலந்து கொண்ட னர்.
சேலம்
தமிழர் திருநாளாம் பொங்கல் திரு நாளை முன்னிட்டு நங்கவள்ளி சிபிஎம் ஒன்றியக் குழு சார்பில் சமத்துவப் பொங் கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட் டது. நங்கவள்ளி ஒன்றியம் ஜலகண்டாபு ரத்தில் தி.மு.க, மனித நேய மக்கள் கட்சி, விவசாய சங்கங்கள் சார்பாக சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. இதில் சிபிஎம் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முக ராஜா, ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணவேணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. ராஜாத்தி ஜி.கவிதா உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். இதே போல் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் சின் னேரி வயக்காடுபகுதியில் முத்துக்கும ரன் தலைமையில் பொங்கல் விழா நடை பெற்றது. இதில் வாலிபர் சங்க முன்னணி நிர்வாகிகள், மாதர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலம் மேற்கு மாநகரம் காசாகர னூர் வாலிபர் சங்க கிளையின் சார் பாக எட்டாவது ஆண்டு சமத்துவப் பொங் கல் திருவிழா கிளை செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. பொங் கல் விழாவையொட்டி சிறுவர் சிறுமியர் களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது வெற்றி பெற்றவர்க ளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேற்கு மாநகர வாலிபர் சங்க செய லாளர் பகத்சிங் கொடியேற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேற்கு மாநகரச் செயலாளர் பி.கணேசன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் குணசேக ரன், கனகராஜ் மற்றும் வாலிபர் சங்க மாநகரத் தலைவர் கோபி மேற்கு மாந கரக் கமிட்டி உறுப்பினர்கள், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டத் தலைவர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். சேலம் வடக்கு மாநகரில் சாமிநாத புரம், சின்னேரிவயல்காடு, அழகாபுரம், பெரமனூர், இரத்தினசாமிபுரம், ரெட்டி யூர், மெய்யனூர் ஆகிய 7 இடங்களில் சிபிஎம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம் பாலர்பூங்கா, மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மக்கள் ஒற்றுமை காப்போம் சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது. சின்னேரிவயல்காடு சிறுவர்கள், பெண் கள் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு லிம்போ கேச வன் சாகச நிகழ்ச்சி, பாலர்பூங்கா நிஜநா டகம் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் வி.வெங்கடேஷ், மாநகரக்குழு உறுப் பினர்கள், கிளைச் செயலாளர்கள், வாலிபர் சங்க மாநகரத் தலைவர் ஆர்.குருபிரசன்னா, மாநகரச் செயலாளர் கே.ராமச்சந்திரன், மாநகரப் பொருளா ளர் டி.மனோகரன், மாதர் சங்க மாநகர செயலாளர் ஆர்.ரம்யா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட நிர்வாகி எஸ்.ஜோசப், ம.ஒ.மேடை மாவட்டக்குழு வி.சரவணன் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்
நாமக்கல்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் திருச்செங்கோடு பகுதி களில் மக்கள் ஒற்றுமை விழாவாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற் றது. குமாரபாளையம் வட்டம் ஆனங் கூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதி ராக மினி மராத்தான் போட்டியும், திருச் செங்கோடு வட்டம் ஆண்டிபாளையம் பொம்மக்கல் பாளையம், பள்ளிபாளை யம் வசந்தா நகர் காவேரி ஆர்எஸ் உள் ளிட்ட பகுதிகளில் குழந்தைகள், வெகு ஜன மக்கள் பங்கேற்புடன் விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டத் தலைவர் எம்.லட்சுமணன், மாவட்ட செயலாளர் எம்.மணிகண்டன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களும் தொடர்ந்து பொங்கல் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.
நவீன ஜல்லிக்கட்டு
நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஒரு திடலில் வட்டம் வரைந்து அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப் பார்கள். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு, அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும். கயிற்றின் மற்றொரு முனை கோழியின் ஒரு காலில் கட்டப் படும் வட்டத்தை தாண்டாமல் போட்டி யாளர் கோழியை பிடிக்க வேண்டும் என்பதே விதி. குறிப்பிட்ட நேர அள விற்குள் கோழியை பிடிக்க வேண்டும் என்பதும், கோழியை பிடிக்கச் செல்லும் போது வட்டத்தை தாண்டி சென்று விட்டாலோ அல்லது குறிப்பிட்ட நேரத் திற்குள் கோழியை பிடிக்க முடியாமல் இருந்தாலோ அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் வட் டத்தை தாண்டாமல் கோழி பிடிப்ப வர்கள் வெற்றியாளர்களாக கருதப்படு வார்கள். இந்த போட்டியில் குழந்தை கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு கோழியை பிடித்தனர். மாடு களை பிடிப்பது ஜல்லிக்கட்டு போட்டி என்றால் கோழியை பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டு என இப்பகுதியினர் பெயர் வைத்துள்ளனர். இந்த போட்டிக்கு திருச்செங்கோடு பகுதியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள் ளது. வீரத்திற்கு ஜல்லிக்கட்டு போட்டி என்றால் விவேகத்திற்கு நவீன ஜல்லிக் கட்டு போட்டி என்கின்றனர் இப்பகுதியி னர். இதுகுறித்து போட்டி ஏற்பாட்டாளர் தேவேந்திரன் என்பவர் கூறும் போது நவீன ஜல்லிக்கட்டு போட்டிகளை காண, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து உற வினர்கள் வருவது வழக்கம். இந்த நவீன ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெண்கள் சிறுவர் சிறுமியர் என பலரும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிகளில் பெண்கள் பங்கேற்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தருமபுரி
இதேபோன்று, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோ. அண்ணாலப்பட்டியில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வட்டப் பொருளாளர் இராகபிரியா தலைமையில் கொண்டா டப்பட்டது. இதேபோன்று மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது.