கோயம்புத்தூர், செப். 12- வானதிக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்க இரண்டு நாள் கோவையில் முகாமிட்டிருந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரா மன், தொழில்முனைவர்களோடு கலந்துரை யாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து கோயம்புத்தூருக்கே உண்டான குசும்புடன் பிரபல ஓட்டல் உரி மையாளர் வறுத்தெடுத்து வழியனுப்பி வைத்த சம்பவம் பேசு பொருளாகி உள் ளது. கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த் தக சபையினருடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புதனன்று கலந்துரை யாடினார். எப்போதும் போல ஒன்றிய அரசு அதைச்செய்தது, இதைச்செய்தது என அளந்து விட்டார். இவர் பேசிய எதையும் கண்டும் காணாது போல தொழில்முனை வோர்கள் மிக இறுக்கமாய் அமர்ந்திருந்த னர். பின்னர், தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப் பட்டது. தொழில் முனைவோர்களின் இறுக் கத்தை உடைத்து அரங்கையே கலகலப் பாக மாற்றினார் ஓட்டல் உரிமையாளர் ஒரு வர். அத்தகைய பேச்சை பேசியவர், தமிழ் நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட் டமைப்பின் தலைவரும், கோவை அன்ன பூர்ணா உணவக குழும தலைவருமான சீனி வாசன். அவர் பேசுகையில் “உங்க பக்கத் துல இருக்கிற எம்எல்ஏ வானதி சீனிவாசன் எங்க கடையோட ரெகுலர் கஸ்டமர் அவர் வ ரும்போது எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க, ஸ்வீட்டுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி, உணவுக்கு 5% ஜி.எஸ்.டி, ஆனா காரத்திற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டியா என கேட் கிறார். வடமாநிலத்தில் எல்லாரும் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால், இனிப்புக்கு குறை வான ஜிஎஸ்டியும், காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது நம்ம எம்எல்ஏ கூறுகிறார் பேக்கரியில் பிரட் பன் ஆகி யவை தவிர அனைத்து பண்டங்களுக்கும் 28% வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அம்மா வானதி சீனிவாசன் வருவது, ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி, காரம் சாப்பிடு வது, அப்புறம் காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி போட்டால் சண்டைக்கு வருகிறார். இது தினசரி நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ் ்வேறு மாதிரி பில் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி கிடை யாது, அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி. இதை பார்க்கும் வாடிக்கையா ளர்கள் ஜாமையும், பட்டரையும் கொடுத்து விடுங்கள் நாங்களே வைத்துக் கொள்கி றோம் என்கிறார்கள். கடை நடத்த முடிய வில்லை மேடம். ஒரே மாதிரியாக ஜிஎஸ்டி பண்ணுங்க மேடம், ஒரு பேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவ தற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள். ஜிஎஸ்டி அதிகாரிகள் இன்புட் கிரெடிட் எடுக் கும் பொழுது அதே கிச்சன், அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது அதிகாரிகளே திணறு கிறார்கள். அவர்களுக்கும் உதவி பண் ணுங்க. இதேபோல் வருடத்தில் ஏதாவது ஒரு நாள் தான் ஹோட்டல்களில் ஒரு அறைக்கு ரூ.7500 என பில் போடுகிறோம். அதுவும் தற் போது ஹோட்டல்களின் அரை கட்டணங் களை மேக் மை ட்ரிப் தான் நிர்ணயிக்கிறது. ஒரு நாள் ரூ.7500 பில் போட்டதற்கு ஆண்டு முழுவதும் 18 சதவீதம் ஜிஎஸ்டி போடு கிறார்கள். ஒரு மாலில் யாரோ ஒருவர் ஹோட் டல் நடத்துகிறார், அதனால் அங்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைவருக் கும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகி றது. இதனை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும் என அடுக்கடுக்காக அடித்து விட்டார். இவரின் பேச்சால் அரங்கமே கெக்க போட்டு சிரித்து கொண்டிருந்தபோது, தான் மட்டும் சிரிக்கவில்லை என்றால் சிக்கல் என் பதை உணர்ந்து, முகத்தை கடுப்பாக வைத் துக்கொண்டு லேசாக சிரித்து வைத்தார் நிர் மலா சீத்தாராமன். தற்போது இந்த வீடியோக் கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.