காஞ்சிபுரம், ஏப். 29-காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிப் பறி செய்யப்பட்ட 9 கோடி ரூபாய் மற்றும் 130 சவரன் தங்க நகைகள், சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் கூட்டாளி கிரண்ராவின் மேலாளர் கொண்டு வந்தது எனத் தெரியவந்துள்ளது.மதுரையிலிருந்து தயாநிதி என்பவர் 9 கோடி ரூபாய் மற்றும் 130 சவரன் தங்கநகைகளை காரில் எடுத்துக்கொண்டு சென் னையை நோக்கி வந்து கொண்டிருந்தார். மதுரையில் நடைபெற்ற நகைக் கண்காட் சியில் காட்சிபடுத்தி விட்டு நகைகளையும் பணத்தையும் அவர் எடுத்துக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் அவரது காரை பின் தொடர்ந்த மர்மக் கும்பல் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சோதனைச்சாவடியில் அவரை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. தாங்கள் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் என்று கூறி காரை சோதனையிட்ட அந்தக் கும்பல் காரில் இருந்த பணம் மற்றும் நகையை எடுத்துக் கொண்டதாகவும் சென் னையில் உள்ள தங்கள் அலுவலகத்தில் வந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறும் கூறிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் அந்தக் கும்பல் கொடுத்த விலாசம் தவறானது என்றும் நூதன முறையில் கொள்ளை நடைபெற்றதும் தெரியவந் ததையடுத்து அது குறித்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே பணம் மற்றும் நகையை காரில் கொண்டு வந்து பறி கொடுத்த தயாநிதி, தொழிலதிபர் கிரண்ராவின் மேலாளர் எனத் தெரியவந்துள்ளது. சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் தொழில் கூட்டாளியான கிரண்ராவின் போயஸ் தோட்ட வீட்டில் மண்ணில் புதைக் கப்பட்ட சிலைகளை அப்போது சிலை கடத் தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.இந்நிலையில் கிரண்ராவின் மேலாளரான தயாநிதி தற்போது கொண்டுவந்தது அவரது பணமா அல்லது கிரண்ராவின் பணமா என காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர். மேலும் கொண்டு வரப் பட்ட பணத்தை விட நகைகளின் மதிப்பு அதிகமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அது குறித்து அவற்றுக்கான ஆவணங்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவின் நடவடிக்கைகள் குறித்து நன்கு தெரிந்த நபர் களே பணம் மற்றும் நகைகளை காரில் கொண்டு செல்லப்படுவது குறித்து அறிந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.