தருமபுரி, டிச. 3- தொடர் மழையால் கறந்த பாலை கொள் முதல் நிலையத்தில் சேர்க்க, ஆற்றின் நடுவே கயிறை கட்டி சுமார் 3,500 லிட்டர் பாலை, கொள்முதல் நிலையத்தில் மலை கிராம மக்கள் ஒப் படைத்தனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக தரும புரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சித்தேரி மலைப் பகுதி யான அரசநத்தம் கலசப்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் ஆங் காங்கே கன மழை பெய்தன. இதனால் மலை குன்றுகளில் காட்டாற்று வெள் ளம் உருவாகி கலசப்பாடி ஆற்றில் திடீ ரென தண்ணீர் பெருக்கெடுத்து ஆற்றில் வெள்ள நீர் சென்று வருகிறது. மேலும் இந்த காட்டாற்று வெள்ளத்தால் அர சநத்தம், கலசப்பாடி, அக்கரைக்காடு கோட்ட வளவு உள்ளிட்ட 10 மலை கிரா மங்களுக்கு செல்லக்கூடிய மக்கள், ஆற்றைக் கடந்து தகுந்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் ஆற்றைக் கடக்க ஆற் றின் நடுவே கயிறு கட்டியும் மக்களின் உதவியுடன் ஆற்றை ஆபத்தான முறை யில் கடந்து தங்கள் கிராமங்களுக்கு ஆற்றைக் கடந்து சென்றனர். குறிப்பாக கலசப்பாடி அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஏராள மான கால்நடை வளர்க்கும் விவசாயி கள் பாலை கறந்து அதனை கேன்களில் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து மலையின் தரைப்பகுதியில் உள்ள மாளகாப்பாடியில் உள்ள பால் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம், தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கறந்த பால் வீணாகிவிடும் என எண் ணிய விவசாயிகள் நலுக்கு பாறை எனும் இடத்தில் ஆற்றின் நடுவே கயிறை கட்டி கயிற்றின் மூலமாக ஆற்றைக் கடந்து சுமார் 3,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாலை பால் கொள்முதல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மழைக்காலங்களில் இது போன்ற காட்டாற்று வெள்ளம் உருவாகி ஆற் றில் செல்வதால் அவ்வப்போது கிராம மக்கள் குடியிருப்புகளுக்கு செல்ல முடி யாமல் தவித்து வருகின்றனர். எனவே கிராமத்திற்கு பாலம் அமைத்துக் கொடுத்தால் ஆற்றில் தண்ணீர் செல் லும் பொழுது ஆற்றைக் கடந்து செல்ல சுலபமாக இருக்கும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பலமுறை ஆட்சியில் இடமும், அரசு அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் இல்லை என வேதனை தெரி விக்கின்றனர்.