districts

img

வேலை நேரத்தை வரைமுறைப்படுத்த வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, டிச.27- வேலை நேரம் மற்றும் வேலையை வரைமுறைப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி சிஐடியு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு  துறையின் கீழ், செயல்படக்கூடிய மக்க ளைத் தேடி மருத்துவத் திட்டத்தில், இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில், மக்களைத் தேடி மருத் துவ தன்னார்வலர்கள் தற்போது நாள் முழுவதும் எம்எல்எச்பி, விஎச்என், பணி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயளிகள் பார்க்கும் பணி, கர்ப் பிணிகள் விவரம் பற்றிய பணி என ஏரா ளமான திட்டப்பணிகள் இவர்களிடம் கொடுக்கப்படுகிறது. தற்போது புதி தாக காச நோய்க்கான மாதிரி எடுக்கும் பணியை செய்ய சுகாதாரத்துறை கட் டாயப்படுத்தி வருகிறது. எந்த விதமான பயிற்சியும் வழங்கப்படாத நிலையில், நோய் தொற்று பரவும் அபாயம் உள் ளது. எனவே, தொற்றும் காசநோய் பணி செய்ய நிர்பந்திக்கக்கூடாது. சீருடை, அடையாள அட்டை, பயணப்படி, கைப் பேசி, ரீசார்ஜ் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண் டும். பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோகிலா தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகரா சன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாவட்ட துணைத் தலைவர்கள் சி.அங் கம்மாள், பி.ஆறுமுகம், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் லோகநாயகி, பொருளா ளர் பழனியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.