திருப்பூர், டிச. 27- திருப்பூர் மாநகராட்சியில் அன்மையில் சொத்துவரி மற்றும் காலியிட வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி மாமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகிறது. இதன்தொடர்ச்சியாக வெள்ளியன்று திருப்பூர் மாநக ராட்சி மேயரிடம் மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் நேரில் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 01.04.2022 அன்று தீர்மான எண்:2இன்படி சொத்துவரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் வேலையின்மையும் அதிகரித்து சிறு குறு தொழில்கள், வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள் ளது. மேலும், அனைத்து அத்தி யாவசியப் பொருட்களின் விலை யும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காலிமனை யிடவரி குடிநீர் கட்டணம், குப்பை வரி உயர்வு திருப்பூர் மக்களை கடுமையாக பாதிக்கும். இது நேரடியாக மக்களை பாதிக்கும் என்பதால், மன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 53ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர் மணி மேகலை சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் அன்றைய தினமே எழுத்துப்பூர்வமாக ஆட்சேப கடிதமும் கொடுத் துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் 12.5.2022 அன்று மாநகராட்சியிலும் மண் டல அலுவலகங்களிலும் ஆட்சே பனை மனுக்கள் கொடுக்கப்பட் டன. ஆனால் மாமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மான நகல் 27.5.2024 அன்று வழங்கப்பட்டது. அதில் சிபிஎம் மாமன்ற உறுப்பி னர் மணிமேகலை-யின் ஆட்சே பனை எதிர்ப்பு தெரிவித்த விபரங் கள் பதிவு செய்யாமல் உள்ளது. இது மன்ற உறுப்பினரையும் வார்டு மக்களையும் அவமானப் படுத்தும் விதமாகவும், புறக்க ணிக்கும் விதமாகவும் மேயரின் நடவடிக்கை உள்ளது. இதுகு றித்து மீண்டும் தனது எதிர்ப்பை பதிவு செய்யக்கோரி மாமன்ற உறுப்பினர் 30.3.2002 அன்று ஆட் சேபனை மனுவை கொடுத்துள் ளார் வருடத்திற்கு 6 சத உயர்வு என்பது பொதுமக்களை கடுமை யாக பாதிக்கும். இதனால் 11.11.2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனுகொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், 4ஆயிரத்து 500 மனுக் கள் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மற்ற அரசியல் அமைப்பு கள் சார்பில் போராட்டங்கள் நடத் தப்பட்டது. பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என் பதால், இது குறித்து கேள்வி களோ,கருத்துக்களோ கேட்கா மல் மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றுவதை எதிர்த்து 30.11.2024 அன்று மாமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப் பினர் ஆர்.மணிமேகலை உள் ளிட்ட பல கவுன்சிலர்களும் பேசி யுள்ளனர். இருந்தும், ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியதாக மேயர் அறிவித்ததை கண்டித்து வெளியில் போராடிய கம்யூ னிஸ்ட் கட்சிகளின் மாமன்ற உறுப் பினர்கள் மீது கடுமையாக தாக் குதலை காவல்துறை மூலம் தொடுக்கப்பட்டது. அதன்பிறகு 9.12.2024 அன்று அனைத்துக்கட்சி கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. வணிகர் சங்கங்களின் கூட்ட மைப்புகள் சார்பில் 18,12.2024 அன்று கடையடைப்புப் போராட்ட மும் நடத்தப்பட்டது. பொதுமக் களை, வர்த்தகர்களை சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்தபவர் களை கடுமையாக பாதிக்கும் சொத்துவரி மற்றும் காலிமனை யிட வரி உயர்வு, குப்பைவரி உயர்வு குறித்தான மன்ற தீர் மானத்தை முற்றிலுமாக ரத்து செய்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மேயர் தினேஷ் குமாரிடம் மனு அளிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெயபால், வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தர்ராஜன், வேலம்பாளையம் நகரச் செய லாளர் ச.நந்தகோபால், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளி யப்பன், தெற்கு ஒன்றியச் செய லாளர் எஸ்.மணிகண்டன் மற்றும் 53 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் ஆர். மணிமேகலை ஆகியோர் பங் கேற்றனர்.