districts

img

ஜல்லிக்கட்டு போட்டி; அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல், ஜன.11- குமாரபாளையத்தில் பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற உள்ள நிலையில், போட்டி நடை பெறும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த  ஆண்டு ஜல்லிக்கட்டு பிப்.2 ஆம் தேதி யன்று நடைபெற்ற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சனியன்று திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, குமார பாளையம் வட்டாட்சியர் சிவக்குமார், திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கலையரசி மற்றும் வட்டார  போக்குவரத்து அலுவலர், பொதுப் பணித்துறை பொறியாளர் உள்ளிட்ட  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேடை அமைக்கும் இடம், வாடிவா சல் அமைக்கும் இடம் மற்றும் பார்வை யாளர்கள் அமருமிடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்ய அரசு அதிகாரிகள் அறி வுறுத்தினர்.