districts

img

விவசாயிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

கோவை, மே 6- விவசாயம் தொடர்பான ஆலோசனைகளை விவசா யிகளுக்கு வழங்கும் வித மாகவும், விளை பொருட் களை நேரடியாக வாடிக்கை யாளர்களுக்கு விற்பனை செய்யும் விதமாகவும் புதிய செயலி கோவையில் வியா ழனன்று அறிமுகப்படுத்தப் பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட் களின் விளைச்சலை அதி கரிக்கும் விதமாகவும், விளை பொருட்களை நேரடியாக வாடிக்கை யாளர்களுக்கு விற்பனை செய்யும் விதமாகவும் ‘பிக் ஹாட்’ என்ற புதிய செயலி  அறிமுகவிழா கோவையில் வியாழனன்று நடைபெற்றது.  தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக் கழகத்தின் மரபுசாரா எரி சக்தித் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் புகழேந்தி இந்த செயலியை அறிமுகப் படுத்தி வைத்தார்.  இதன்பின் அவர் கூறுகையில், வேளாண் உற்பத்தி செலவை குறைக்கும் வழி வகை களையும், மண் தன்மைக்கு ஏற்ற பயிர்  வகைகளையும் இந்த செயலி விவசாயிக ளுக்கு தெரியப்படுத்துகிறது. அதோடு, பருவ நிலை, பயிர்களுக்கு தேவையான உர அளவுகள் குறித்தும் அவ்வப்போது இந்த செயலி அறிவிக்கும். மேலும், விவசாயி கள் தங்கள் விளை பொருட்களை இந்த  செயலி மூலம் விற்பனை செய்யும் முறையும் உள்ளது. இந்த செயலி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக, அறிவியல் நுணுக் கங்களை கற்றுக் கொடுத்து விஞ்ஞான முறையில் விவசாயம் செய்ய உதவும், என்றார்.