districts

அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்திடுக

திருப்பூர், செப்.10 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களின் கட்டி டங்களின் தரம் மற்றும் அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்திடு மாறு இந்திய மாணவர் சங்கம் வலியு றுத்தியுள்ளது.  இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் சா.பிரவீன் குமார், மாவட்டச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது ஆகியோர் சனிக் கிழமை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட சாமிகவுண்டம்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் மேற்கூறை இடிந்து விழுந்துள்ளது. அந்த நேரத் தில் அந்த இடத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால்  உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து  வட்டார வளர்ச்சி அலுவலரும், முதன்மை கல்வி அலுவலரும் தற் போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் மற்றும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இப்படியான சம்பவங் கள் நிகழாமல் இருக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதேபோல் ஊத்துக்குளி ஒன்றியம் சரவணபுரம் அரசு மேல் நிலை பள்ளியிலும் சுற்றுச்சுவர் இல்லை. மழை காலங்களில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற் கிறது. இதனால் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்து தரக் கேட்டு மனு  கொடுக்கப்பட்டது. ஆனால் அப் போதைக்கு மண் கொட்டி அங்கு சரி செய்யபட்டது. ஆனால் தற்போது மழை காலம் துவங்கியுள்ள நிலை யில் இன்று வரை சுற்று சுவர் அமைக் கப்படாமல் இருப்பது வேதனைக் குறியது. இதேபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி களில் அங்கு படிக்கக்கூடிய மாணவ,  மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப  ஏராளமான பள்ளிகளில் அடிப்படை  வசதிகள் இல்லாமலும், கட்டி டங்கள் இடிந்து விழும் நிலையிலும் இருக்கிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து அறிக்கை தயார் செய்து அதன் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியு றுத்தியுள்ளது.