கோவை, செப். 8- வாசிப்பை நேசிப்போம், வாழ்வை யும் அறிவையும் மேன்மையடையச் செய்வோம் என்கிற உந்துதலோடு கோவை அரசு கலைக்கல்லூரியில் வாசகர் வட்ட துவக்க விழா நடைபெற் றது. கோவை அரசு கலைக்கல்லூரி யில் செயல்படும் பொது நூலகம் மிக பழமையான நூலகமாகும். இந்நூல கத்தில் இருந்து பல ஆளுமைகள் உரு வாகியுள்ளனர். இந்த நூலகம் சார்பில் வாசகர் வட்டத்தை கல்லூரி நிர்வாகம் முனைப்பு காட்டியது. இதன்தொடர்ச்சி யாக கடந்த வியாழனன்று, வாசகர் வட்ட துவக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரி நூலகர் முனைவர் சந்திரா வரவேற்று பேசி னார். இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்க ளான வழக்கறிஞரும், எழுத்தாளரு மான மு.ஆனந்தன், தமிழ்நாடு அறி வியல் இயக்க பொதுச்செயலாளர் முகம்மது பாதுஷா ஆகியோர் பங்கேற் றனர். நிகழ்வின் நோக்கம் குறித்து தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் மொ.இரவிக்குமார் அறிமுக உரையாற் றினார். இந்நிகழ்வில், பொருளியல் துறை பேராசிரியர் பி.ஆர்.ரமணி எழுதிய அறி வியல் பர்வையில் நல்லகாலம்... நல்ல நேரம்... என்னும் நூலையும் அரசு கலைக் கல்லூரி முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும் வரலாற்று துறை தலைவரும் பாரதியார் பல்க லைக்கழக வரலாற்று துறை சிறப்பு பேராசிரியர் முனைவர் தா இளங்கோ வன் அவர்கள் எழுதிய AN INDEX TO INDIAN CONSTITUTION என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் சார்பில் கல் லூரி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பா.செல்வராஜ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற் றனர்.