கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.
ஈஷா யோகா மையம் குறித்தான செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், ஓம்கார் பாலாஜி கைது செய்யப்ப்ட்டதை கண்டித்தும் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்பாட்டம் மேற்கொள்ள இறந்த நிலையில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென கட்சி தொண்டர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செஞ்சிலுவை சங்கம் நோக்கி தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் அனுமதி இல்லை என்று கூறியதை தொடர்ந்து திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்திற்கு 20க்கும் குறைவான நபர்களே வந்திருந்த நிலையில், இன்னும் 100 பேர் போராட்டத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள் அதுவரை கைது செய்ய வேண்டாம் என காவல்துறையினரிடம் அர்ஜூன் சம்பத் மன்றாடினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.