திருப்பூர், டிச. 21 - இந்திய மக்களைக் கூறுபோ டும் நாசகர குடியுரிமை திருத்தச் சட்டத்தை குப்பையில் வீசுவோம் என்ற முழக்கத்தோடு திருப்பூரில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார் பில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் நொய்யல் அருகே யுனிவர்சல் தியேட்டர் சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ ஆலோசகர் எம்.அப்துல் கரீம் இம்தாதி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் தலை வர் வி.கே.எம்.ஜகரிய்யா தொடக்கி வைத்துப் பேசினார். இதில் திமுக மாநில தேர்தல் பணிச் செயலாளர் கம்பம் செல்வேந்தி ரன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, முஸ்லீம் லீக் எம்.பி. கே.நவாஸ் கனி, மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ எம்.தமிமுன் அன்சாரி, மதிமுக இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தோர் மத்திய அரசின் நயவஞ்சகமான இந்த சட்டத் திருத்தத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்த்து உரையாற்றினர். இந்த போராட்டத்தில் திருப்பூர் வட்டா ரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக திருப்பூர் வட்டார ஐக்கிய ஜமாத் சார்பில் கே.தஸ் தகீர் நன்றி கூறினார். முன்னதாக இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ள மோடி அரசைக் கண்டித்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடும் பாவியை எரித்தும் போராட்டக் காரர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.