தருமபுரி, பிப்.22- தருமபுரி மாவட்டத்தில் விவ சாயிகளை அனுபவ நிலங்களிலி ருந்து வெளியேற்றம் செய்யும் வனத்துறையின் நடவடிக்கைக ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் தரும புரி மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் விடுத்துள்ள அறிக்கை யில், அரூர் வட்டம், கோட்டப்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சிக்களூர், பெரியப்பட்டி உள்ளிட்ட கிராமங்க ளிலும், பாலக்கோடு வனச்சரகத் திற்குட்பட்ட மல்லுப்பட்டி, போடர அள்ளி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் பல தலைமுறைகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வரு கின்றனர். இந்நிலையில், பயிர், உடைமைகள் மற்றும் விளைப் பொருட்களை பறிமுதல் செய்து, நிலத்திலிருந்து வெளியேற்று வோம் என்று வனத்துறையினர் விவசாயிகளின் வீடுகளின் சுவற் றில் நோட்டீஸ் ஒட்டி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். வனத்துறையின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது; சட்டவிரோதமா னது; விவசாயிகளின் நீண்டகால அனுபவ உரிமையை மீறுவதுமா கும். விவசாயிகளின் நூற்றாண்டு அனுபவ உரிமையை 1882 ஆவது ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டம் 5 ஆவது சட்டம் பிரிவு 68ஏ-வின்படி ஆக்கிரமிப்பு என்று கூறுவது ஏற் புடையதல்ல. 1989 ஆம் ஆண்டு சாகுபடியில் உள்ள விவசாயிகளை வெளியேற்ற தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு பிறகு தான் ஒன்றிய அரசு வன உரிமைச் சட்டம் 2006யை கொண்டு வந்தது. வன உரிமைச்சட்டம் 2006-ன்படி 5 ஆண்டு அனுபவத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கும், 75 ஆண்டு அனுபவத்தில் உள்ள சாகுபடி நிலங் களை பழங்குடி அல்லாத சாதி யினராக இருந்தாலும் அவர்களுக் கும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று உள்ளது. எனவே, 1989 ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தை வன உரிமைச் சட் டத்தின் சரத்துகளுக்கு ஏற்ப திருத்த வேண்டும் என்று விவசாயிகள் மற் றும் பழங்குடி மக்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். எனவே, நில வெளியேற்றம் செய்யும் முயற்சியில் மாவட்ட வனத்துறையின் நடவடிக்கை களை அடாவடி செயல்களை வன் மையாக கண்டிப்பதோடு, இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அனு பவ நிலங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும். மேலும், பென்னாகரம் வனச் சரகத்திற்குட்பட்ட பதனவாடி வனப் பகுதி, ஏமனூரில் வனத்துறைக்கு சொந்தமானது என உரிமைக்கோரப் பட்ட நிலப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு பின்பு வருவாய்த்துறைக்கு சொந் தமானது என்று அரசால் அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து, அப்பகுதி மக்க ளுக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்க வும், சாலை அமைக்கவும் வரு வாய்த்துறை அனுமதி அளித்திருப் பதையும் சுட்டிக் காட்ட வேண்டி யுள்ளது. அதேபோல் பாலக்கோடு வனச்சரகத்திற்குட்பட்ட மல்லுப் பட்டி, கேசர்குளி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம் பங்களை அகற்ற வேண்டும் என்று வனத்துறையினர் கெடுபிடி செய்வ தையும் கைவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.