கோவை, டிச.27- அன்னூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வியாழனன்று நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக, இடிகரை பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் கோவை மண்டல பேரூராட்சி களின் உதவி இயக்குநர் சு.மனோரஞ்சிதம் தலைமை ஏற்றார். இதில், இடிகரை கிராம நிர்வாக அலுவலகம், அரசு கால்நடை மருத்துவமனை, அரசு உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இடிகரை அங்கன்வாடிகள் மற்றும் நியாயவிலைக்கடைகளில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இடி கரை பேரூராட்சியில் பொது மக்களது குறைதீர் மனுக் கள் பெறப்பட்டு 170 மனுக்களுக்கு தீர்வு காண துறை வாரியாக அனுப்பப்பட்டது. இந்நிகழ்வுகளில், பேரூ ராட்சித் தலைவர் என்.ஜெனார்த்தனன், செயல் அலுவ லர் ஜெகதீஸ், துணைத் தலைவர் என்.சேகர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.