districts

img

டிஆர்இயு மகாசபைக் கூட்டம்

உடுமலை, டிச.27- டிஆர்இயு-வின் மகாசபைக் கூட்டம், உடுமலை யில் வெள்ளியன்று நடைபெற்றது. தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர் இயு) – சிஐடியு-வின் பழனி கிளையின் பொது மகா சபை கூட்டம், வெள்ளியன்று உடுமலை ரயில் நிலை யத்தில் கிளையின் தலைவர் ஜெயபிரகாஷ் தலை மையில் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் ஆன்ட்ரன்  சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், வெளி மாநி லங்களில் இருந்து ரயில்வே துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களை தங்களின் சொந்த மாநிலங்க ளுக்கு பணி மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே துறையில் பொறியியல் (இன்ஜி னியரிங்) பிரிவில் வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்கு அனைத்து பிரிவுகளிலும் வேலை வழங்க வேண்டும். 8 ஆவது சம்பள கமிஷன் மற்றும் பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தொழிற் சங்க அங்கீகார தேர்தலில் டிஆர்இயு-வை வெற்றிப் பெற செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி  தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் கார்த்திக் சங் கிலி, கிளைச் செயலாளர் பிரதாப், பொருளாளர் நாக ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.