திருப்பூர், செப். 13 - மதிப்பெண்கள் நிரந்தரம் அல்ல; நாம் பெறும் அறிவு நிரந்தரமானது என்று முனைவர் விஜய் அசோகன் கூறி னார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்காகவும் தொடர் நெறிப் படுத்துவதற்காகவும் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இளை ஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்த னையில், ஆற்றலில், திறமையில் மேம் படுத்துவதற்காக வழிகாட்டுதல் பயிற்சி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் திங்களன்று நடை பெற்றது. மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அண்ணா துரை தொடக்கவுரை ஆற்றினார். இந் நிகழ்வில் அறிவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் விஜய் அசோகன் பங்கேற்று மாணவியருடன் கலந்துரையாடினார். வெளிநாட்டு பல்கலைக்கழகங் களில் உள்ள உயர் கல்விப் படிப்புகள், உலகளாவிய வேலைவாய்ப்புகள், தாய் மொழியில் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம், உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகை, நீட் தேர்வை எதிர் கொள்வது குறித்து பல்வேறு கேள்விகளை மாணவிகள் கேட்டனர். நிகழ்வில் விஜய் அசோகன் பேசியது, தமிழ்நாட்டு வளர்ச்சியில் பள்ளிக் கல்வியும் கல்லூரி கல்வியும் இணைந்தே இருந்துள்ளன. அவ் வகையில் இன்றைய முதல்வர் அறிவித் திருக்கும் நான் முதல்வன் திட்டம் தமிழ் நாட்டு கல்வி வளர்ச்சியின் அடுத்த படி நிலையாகும். மாணவ, மாணவிகளை கல்வியில் வெற்றி பெற வைத்து அவர்களின் உயர்வுகள் மூலம் தமிழ் நாட்டை உயர்த்தும் நோக்கத்தோடு இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் எண்ணற்ற முன்னேற்றங்களை கண்டிருக்கும் தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமான மாணவ, மாணவிகள் அடுத்தடுத்த படி நிலைகளில் வெற்றி பெறுவதற்கு அடிப் படை தகவல் பரிமாற்றம் முக்கிய மானது. அந்த வகையில் நாம் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், பல் கலைக்கழகங்களில் மாணவ, மாணவி களுக்கு உயர்கல்வியில் வன் திறன், மென் திறன் பயிற்சிகளை அதிகப் படுத்தி, தொடர்ந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த அறிவூட்டல்களை வழங்கும்பொழுது மென்மேலும் வளர்ச்சி அடைந்து எல்லோரும் கல்வி யில் முதல்வர்களாய் திகழ முடியும். மதிப்பெண்களை நோக்கியோ, தேர்வுகளை நோக்கியோ மட்டும் வாழ்க்கையை முடிவு செய்யாதீர்கள். தொடர்ந்து வாசியுங்கள், தேர்ந்தெ டுக்கும் துறையில் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து வளருங்கள். மதிப்பெண்கள் நிரந்தர மானவை அல்ல, ஆனால் நீங்கள் பெரும் அறிவு நிரந்தரமானவை என் பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவ் வாறு கூறினார்.