districts

img

உச்ச  நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி

அருந்ததியர்களுக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச  நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உள் ஒதுக்கீடு செல்லும் என்று வெள்ளி யன்று உறுதிப்படுத்தி உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, திருப் பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொது மக்களுக்கு இனிப்பு  வழங்கி கொண்டாடினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உச்ச நீதிமன்ற தீர்ப்பை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.