districts

img

கால்நடைகளுக்கு வாய்ப்புண் நோய் பரவல்

கால்நடைகளுக்கு வாய்ப்புண் நோய் பரவல் கோபி, டிச.27- கோபிசெட்டிபாளையத் திற்குட்பட்ட பகுதிகளில் பரவ லாக கால்நடைகளுக்கு வாய்ப் புண் ஏற்பட்டு வருவது விவ சாயிகள் மத்தியில் கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி சுற்று வட்டார பகுதிகளான  மொடச்சூர், நாதிபாளையம், பெரியார்நகர், பொலவகாளி பாளையம், அய்யம்புதூர், செங்கோட்டையன் நகர் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால், கால்நடைகள் வாய்ப்புண், கொப்பளம் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி வரு கின்றன. இதில் குறிப்பாக, ஆடுகளுக்கு வாய்புண் நோய்  வேகமாக பரவி வருகிறது. ஆடுகளின் தாடை பகுதியில் கொப்பளம் பரவி வருகிறது. இதனால், ஆடுகள் தீவனம் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு பரவும் நோய்தாக்கம் என்ன எது என தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கால்நடை களின் வாய்களில் புண் எதனால் ஏற்படுகிறது என்பது தெரிய வில்லை. தற்போது, ஆடுகளின் தாடை பகுதியில் கொப்பளத் தின் மீது மஞ்சளை தடவி பராமரித்து வருகிறோம். இது எவ் வகையான நோய் என கால்நடை துறையினர் விவசாயிக ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாம்கள் அமைத்து தாடை  பகுதியில் பரவி வரும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்து கோபி கால்நடைபராமரிப்புத்துறை அதிகாரி கள் கூறுகையில், பனிகாலம் என்பதால் வாய்புண் நோயால் ஆடுகள் பாதிக்கப்படுகின்றன. பனி அல்லது மழையால்  புதிதாக முளைத்த புற்களை ஈரத்துடன் ஆடுகள் அதிகமாக உண்பதே இதற்கு காரணம். இந்நோய் வராமல் தடுக்க பனிக் காலம் முடியும் வரை தினமும் காலை 10மணிக்கு மேல் நன்றாக வெயில் வந்த பிறகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட  வேண்டும். கால்நடை வளர்ப்போர் ஆடுகளின் மீது மழை  பனி நேரடியாக விழாமல் பார்த்து கொள்ள வேண்டும். பனி, மழைக்காலம் முடியும்வரை ஆடு, மாடு, கோழிகளை முடிந்த வரை கூரைகளின் கீழ் பராமரிக்க முயற்சிக்க வேண்டும்.  கால்நடைகள் பராமரிக்கப்படும் கூரையின் அடிப்பகுதியி லும் அருகிலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு சாம்பிராணி புகைமூட்டம் போடுவது இதற்கு நல்லது. ஈரம் இல்லாத நன்கு உலர வைக்கப்பட்ட தீவனங்களையே கொடுக்க வேண்டும். வாய்ப்புண் ஏற்பட்ட ஆடுகளுக்கு தனியாக தண்ணீர் வைக்க வேண்டும். நோய்  ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவரி டம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். நோய் ஏற்பட்ட ஆடு கள் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும். உயிரிழப்பு ஏற்படாது, என்றனர்.