போக்சோவில் ஓவிய ஆசிரியர் கைது
கோவை, பிப்.19- கோவையில் ஒன்றிய அரசு நடத்தும் பள்ளி மாணவிகளி டம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் கோவை, பந்தயசாலை பகுதியிலுள்ள ஒன்றிய அரசு நடத்தும் பள்ளியில் ஓவிய ஆசிரி யராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் மாணவிக ளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளியின் முதல்வரிடம் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பயிலும் மாணவிக ளிடம் பள்ளி நிர்வாகத்தினர் விசாரானை நடத்தியதில், ஓவிய ஆசிரியர் ராஜன் மாணவிகளிடம் அத்துமீறியது தெரிய வந்தது. தொடர்ந்து பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில், ஓவிய ஆசிரியர் ராஜன் மீது காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்புக்கொடி காட்ட முடிவு
கோவை, பிப்.19- தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை கண்டித்து. பிப்.25 ஆம் தேதியன்று கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்துவதாக முற்போக்கு அமைப்பி னர் முடிவு செய்துள்ளது. அண்மையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனி டையே, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு அர சிற்கு வழங்க வேண்டிய 2,400 கோடி ரூபாய் நிதி உதவியை ஒன்றிய அரசு நிறுத்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிப்.25 ஆம் தேதியன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவுள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்யூ னிஸ்ட்கள், திராவிட அமைப்புகள், தலித் மற்றும் அம்பேத்க ரிய அமைப்பினர், கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வாகனங்கள் திருட்டு: 2 பேர் கைது
நாமக்கல், பிப்.19- ஜேடர்பாளையம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடிய 2 பேரை காவல் துறையி னர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் பகுதியில் அடிக் கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோயின. இதனால் குற்ற வாளிகளைப் பிடிப்பதற்காக ஜேடர்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் கதீஷா பேகம், தனிப்பிரிவு தலைமை காவலர் பிரவீன், தனிப்படை போலீசார் செழியன், சிவகுமார் ஆகி யோர் திங்களன்று ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் இருவரும் கரூர் மாவட்டம், நெரூர், பளையூர் பகுதி யைச் சேர்ந்த யுவராஜ், பிரனேஷ் ஆகியோர் என்பதும், இரு வரும் ஜேடர்பாளையம், நல்லூர் பகுதிகளில் 11 இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதை யடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களி டமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த னர்.
இலக்கியப் போட்டி
தருமபுரி, பிப்.19- பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவி களிடையே மாவட்ட அளவி லான இலக்கியப்போட்டிகள் தருமபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று நடைபெற் றது. கட்டுரை, கதை கூறுதல், கவிதை எழுதுதல், பேச்சுப் போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற் றன. இதில் வெற்றி பெறுப வர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறு வார்கள். மேலும், மாநில அள விலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வெளி நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். கடந்தாண்டு கடத்தூரில் 2 பேர், அவ்வையார் அரசுப் பள்ளியிலிருந்து 2 பேர் என 4 மாணவ, மாணவிகள் மாநில அளவில் வெற்றி பெற்று சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தூர் அருகே 2 குழந்தைகள் வெட்டிக்கொலை
சேலம், பிப்.19- ஆத்தூர் அருகே 2 குழந்தைகள் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி தவமணி (38). இத்தம் பதிக்கு வித்ய தாரணி (13), அருள் பிரகாஷ் (5), அருள்குமாரி (10) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், புத னன்று காலை அசோக்குமார் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தை கள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலை யில் கிடந்துள்ளனர். குழந்தைகள் மூவரும் ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்ட நிலை யில் கிடந்துள்ளனர். அருள் பிரகாஷ், வித்ய தாரணி ஆகியோர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தது தெரியவந்தது. பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த கெங்கவல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவர் அசோக்குமாரிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதனிடையே, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தினார். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் துறை யினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் தருமபுரி, பிப்.19- காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர்களின் பணி அழுத்தத்தை களைந்திடவும், போதிய கால அவகாசம், அடிப்படை கட் டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்க வேண் டும். வருவாய்த்துறையில் மூன்றாண்டுகளுக்கு மேல் காலி யாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய நிலை களில் ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் தொடர்பான தெளிவான சுற்றறிக்கை வெளியிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். முழுப்புலம் பட்டா மாறுதல் செய் யும் அதிகாரத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சிய ருக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.துரைவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் கடன் பெற்ற மூவருக்கு மூன்று வருட சிறை தண்டனை
திருப்பூர், பிப்.19- ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் கடன் பெற்ற 3 பேருக்கு மூன்று ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து குற்ற வியல் நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருப்பூர் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி யம் என்பவருக்கு சொந்தமான 2.32 ஏக்கர் இடத்தை குமரன் ரோட்டில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க சென்றுள்ளார். ஏற்கனவே ராமகிருஷ்ணன் என்பவர் சுப்பிரம ணியத்திற்கு தெரியாமல் அவரிடமிருந்த இடத்தை ரூ.4 லட் சத்து 90 ஆயிரத்திற்கு வாங்கியது போல போலியாக ஆவணம் தயாரித்திருக்கிறார். அவர், சிவக்குமார், செல்வராஜுடன் சேர்ந்து ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் பத்திரத்தை வைத்து ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில் ராமகிருஷ்ணன், சிவக்குமார், செல் வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை குற்றவி யல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்றது. புதனன்று குற்றம் சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சிவக்குமார், செல்வ ராஜ் ஆகிய மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க கூட்டம்
திருப்பூர், பிப்.19- அரசுப் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களைக் கண்ட றிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல் வித்துறை சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மீளாய்வுக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிக ளில் இடையில் படிப்பை நிறுத்திய மாணவர்கள் கண்டறிந்த தன் அடிப்படையில் அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவ ழைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. சில இடை நின்ற மாணவர்கள் ஆசிரியர்களின் முயற்சியால், மாணவர் கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி பள்ளிக்கு வரவழைத்த முயற்சிகள் பாராட்டப்பட்டது. குறிப்பாக 10 ஆம் வகுப்பில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பொதுத் தேர்வு எழுத அழைத்து வருவது மற்றும் தனி கவனம் அளிப் பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களை சார்ந்த பள்ளி மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்ணிடம் அத்துமீறல் இரண்டு வருடம் சிறை தண்டனை
பெண்ணிடம் அத்துமீறல் இரண்டு வருடம் சிறை தண்டனை திருப்பூர், பிப். 19 - காமராஜ் காலனியில் ஒரு பெண்ணிடம் அத்துமீறி யவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. திருப்பூர் பெரியாண்டிபாளையம், காமராஜ் காலனியில் ஒரு பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த தாஸ் (47) என்பவர் தன்னிடம் அத்துமீறியதாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தாஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவ லுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் புலன் விசாரணை முடித்து குற்ற அறிக்கை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருப்பூர் மாவட்ட கூடு தல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி முடித்து நீதிபதி ரஞ்சித்குமார் செவ்வாயன்று தீர்ப்பளித்தார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தாஸுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ..5000 அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக் கில் உதவி அரசு வழக்குரைஞர் பானுமதி ஆஜரானார்.
நுண்ணறிவு பிரிவு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருப்பூர், பிப்.19- நுண்ணறிவு பிரிவு காவலர்கள் இருவரை ஆயுதப்ப டைக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித் துள்ளார். திருப்பூர் மாநகரில் 8 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் ஒவ்வொரு நுண்ண றிவு பிரிவு காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் வீரபாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார், மத்திய காவல் நிலைய நுண் ணறிவு பிரிவு காவலர் குமாரவேல் ஆகியோரை ஆயுதப்ப டைக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்த ரவு பிறப்பித்துள்ளார்.
காவலர்கள் தாக்கிய கருப்பு தினம்: வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
திருப்பூர், பிப்.19- சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் தாக்கினர். இந்த தினத்தை ஆண்டுதோறும் கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி இந் தாண்டும் புதனன்று வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக கடைப் பிடித்து, நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திருப் பூர் மாவட்ட பார் அசோசியேசன், திருப்பூர் அட்வகேட் அசோசி யேசன், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் அசோசி யேசன் ஆகிய சங்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
பணம், நகை கொள்ளை
திருப்பூர் , பிப்.19- திருப்பூர் காங்கேயம்பா ளையம் புதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சகுந் தலா (60). இவர் வீட்டு வேலைகளை செய்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத கார ணத்தால் செவ்வாயன்று தனது மகளுடன் மருத்துவம னைக்கு சென்று மகள் வீட்டில் தங்கினார். புதனன்று காலை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந் து, கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோவை பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 30 ஆயி ரம் ரூபாய் பணம் திருட்டு போயிருந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் இவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
தீக்கதிர் செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு ஆதார் அட்டை வழங்கல்
நாமக்கல், பிப்.19- தீக்கதிர் செய்தியின் எதிரொலியாக, மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - சங்ககிரி சாலை, ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதியில் மாரக்கால் (62) என்ற மூதாட்டி, உறவினர்கள் யாருமின்றி தனியாக வசித்து வரு கிறார். 100 சதவிகித பார்வை திறனற்றவரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆதார் அட்டை எடுக்க முடி யாத சூழலில் இருந்து வந்துள்ளார். ஆதார் அட்டை இணைப்பு பிரச்சனை காரணமாக, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வராததால் மூதாட்டி தவிப்புக்குள்ளாகி வந்தார். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மூதாட்டியை நேரில் சந்தித்த சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் வரு வாய் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்துச் சென்றனர். இந்நிலையில், புதனன்று மாவட்ட ஆட்சி யரின் அறிவுறுத்தலின்படி, மூதாட்டி மாரக்காலுக்கு சிறப்பு கவனம் மேற்கொள்ளப்பட்டு ஆதார் அட்டையை மூதாட்டி மாரக்கால் வீட்டில் குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக் குமார், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக உதவியாளர் மோகன் உள்ளிட்டோர் வழங்கினர். இனி தடை யின்றி ஓய்வூதியம் பெறலாம் என அதிகாரிகள் தெரி வித்துள்ளதால் மூதாட்டி மாரக்கால் மகிழ்ச்சி அடைந்துள் ளார்.
நலத்திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
மேட்டுப்பாளையம், பிப்.19- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ.ராசா செவ்வாயன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள மலைவாழ் மக்களின் தேவைகளை உணர்ந்து தொகுப்பு வீடுகள் கட்டித் தந்துள்ளதோடு, முன் னெப்போதும் இல்லாத வகையில் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது, என்றார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கோவை, பிப்.19- சூலூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ் மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே குமரன் கோட்டம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டுள் ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக டாஸ் மாக் கடை வருவதற்கு எதிர்ப்பு தெரி வித்து வந்த நிலையில், திடீரென இர வோடு இரவாக செவ்வாயன்று டாஸ் மாக் கடை திறக்கப்பட்டது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் புத னன்று, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், என வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், குடியிருப்பு கள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலை உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை திறக் கப்பட்டிருப்பது மிகவும் தவறானது. இத னால் இளைஞர்கள் மற்றும் மாணவர் கள் தவறான வழிக்குப்போக வாய்ப்புள் ளது. எனவே இந்த கடையினை உடன டியாக அகற்ற வேண்டும், என்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைத்தனர். ஆனால், பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக கூறினர். இதற்கிடையே, டாஸ்மாக் கடை திறப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, விதிகளுக்குட்பட்டே கடை திறக்கப்பட் டுள்ளதாகவும், எனினும் மக்களின் கோரிக்கை குறித்து டாஸ்மாக் நிர்வாகத் தின் உயரதிகாரிகளுக்கு தெரிவிப் போம், என்றனர்.
அணைப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை
கோபி, பிப்.19- கோபி அருகே உள்ள குண்டேரிப் பள்ளம் அணைப் பகுதியில் தனிநபர் கள் சிலர் ஆழ்துளை கிணறு அமைத் ததை மூடி சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அமைச்சர் சு.முத்து சாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள குண்டேரிப் பள்ளம் அணையானது கொங்கர் பாளையம், வினோபாநகர், வாணிப் புதூர், கவுண்டம்பாளையம், கள்ளியங் காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரா மங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும், பாசன வாய்க்கால் மூலம் நேரடியாக 2000 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக 5000 ஏக் கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர வனவிலங்குக ளின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில், குண்டேரிப் பள்ளம் அணைப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் தனிநபர்கள் சிலர் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். இதனால், சுற்றுவட் டார கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்படும். எனவே, ஆழ்துளை கிணற்றை மூடி சீல் வைக்க வேண்டும், என வலியுறுத்தி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், திங்களன்று அணைப் பகுதியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை அறிந்த அப் பகுதி பொதுமக்கள், இப்பிரச்சனை யில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி சத்தி - அத்தாணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால், மறியலில் ஈடு பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த அனைவரை யும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து, இரவு விடு வுத்தனர். ஆனால், கிராம மக்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் இடத்தை விட்டு செல்வதில்லை என்று தனியார் மண்டபத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து வீட்டுவசதிதுறை அமைச்சர் சு. முத்துச்சாமி கிராம மக்களை திங்க ளன்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நலன்கருதி இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட மாவட்ட நிர்வாகம் அரசு வழக்குரைஞர்களை கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தை அணுகுவது குறித்து முடிவு எடுக்கப் படும், என பொதுமக்களிடம் தெரிவித் தார்.
வேலை தேடி திருப்பூர் வந்த ஒடிசா பெண்ணை வன்கொடுமை செய்த மூவர் கைது
திருப்பூர், பிப்.19- ஒடிசா மாநிலத்தில் இருந்து பனியன் நிறு வனத்தில் வேலை தேடி திருப்பூருக்கு வந்த பெண்ணை வன்கொடுமை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்த னர். ஒடிசா மாநிலத்திலிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூருக்கு ரயி லில் 27 வயதுடைய பெண், தனது கணவர் மற் றும் 3 வயது பெண் குழந்தையுடன் கடத்த பிப்.17 ஆம் தேதியன்று இரவு திருப்பூருக்கு வந்துள்ளனர். இவர்கள் இரவில் எங்கு செல் வது எனத் தெரியாமல் ரயில் நிலையத்தில் நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நதிம் (24), முகமது டேனிஸ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேர் பனியன் நிறுவ னத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ள னர். இரவு தங்கள் அறையில் தங்கிக் கொள் ளலாம் எனக் கூறி ஆறு பேரும் இரவு உணவு உட்கொண்டு விட்டு அறையில் தூங்கியுள்ள னர். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி ஒடிசா பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த னர். வெளியில் கூறினால் கொன்று விடுவ தாக மிரட்டியுள்ளனர். அங்கிருந்து வெளியே றிய அந்த குடும்பத்தினர், வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருப் பூர் வடக்கு மகளிர் போலீசார் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சி றுவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். கைது செய்யப்பட்டவர்கள் மீது உயிர் பயம் ஏற்படுத்துதல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கோவை, பிப்.19- கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப் பம்பட்டி, ஸ்ரீநகர் பகுதியி லுள்ள குடோனில், எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சூலூர் காவல் துறையினர், அந்த குடோனில் சோதனை மேற்கொண்டதில், 100க்கும் மேற்பட்ட கேன்களில் 5145 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், எரிசாரா யத்தை கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 பேரை கைது செய்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.