திருப்பூர், ஜூலை 24 – கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். உடுமலை - கொழுமம் சாலை, எஸ்.வி.புரம் பேருந்து நிலையம் அருகில் திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.எம்.பா ளையம் கிளைச் செயலாளர் எஸ்.சுதா சுப்பிரமணியம் தலைமை ஏற்றார். இதில், கணக்கம்பாளை யம் ஊராட்சியில் குடிநீர், சாலை மற்றும் பொது சுகாதாரம் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும். நிர்வாக சீர்கேட்டைக் களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூ தனன் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பேச்சியப்பன், தாசன், ராஜேந்திரன், சங்கரலிங் கம் மற்றும் குடியிருப்போர் சார் பில் எம்.எம்.ஈஸ்வரி, கட்சியின் நகர்க்குழு சார்பில் வி.விஸ்வநா தன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பஞ்சலிங்கம் ஆகியோர் உரை யாற்றினர். கட்சியின் நகரச் செய லாளர் கே.தண்டபாணி நிறை வுரை ஆற்றினார். திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் சாமிதுரை நன்றி கூறினார்.