தருமபுரி, டிச.27- பொங்கல் தொகுப்பு மற்றும் போனஸ் வழங்க வேண்டும், என வலியுறுத்தி சிஐடியு கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன், ரூ.5 ஆயி ரம் போனஸ் வழங்க வேண்டும். நல வாரியத்தை சீர்குலைக்காமல் ஆன்லைன் சர்வர் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும். பென் சன் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வய தில் பென்சன் வழங்க வேண்டும். பென்சன் பெறும் தொழிலாளி மர ணமடைந்தால் இயற்கை மரண உதவி நிதியாக ரூ.ஒரு லட்சம் வழங்க வேண்டும். வாரிய கூட்ட முடிவுகளை அமலாக்கி, அரசாணை வெளியிட வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமையாக்கி, விரிவு படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி தொழிலாளர் நல வாரி யம் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாநி லச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, கட் டிடத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.கலாவதி, மாவட்டப் பொருளாளர் ஜி.செல்வராஜ், நிர் வாகிகள் சி.ராஜா, கே.எம்.முருகே சன் உட்பட திரளான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். சேலம்
சேலம்
மாவட்டம், கோரிமேட்டி லுள்ள கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சேலம் ஜில்லா கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.மயில்வே லன் தலைமை வகித்தார். இதில், சங் கத்தின் மாநில சிறப்புத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிஐடியு மாவட் டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் சி. மோகன், மாவட்டச் செயலாளர் சி. கருப்பண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், மேட்டுப் பாளையத்திலுள்ள நலவாரிய அலு வலகம் முன்பு, கட்டுமானத் தொழி லாளர் சங்க மாவட்ட நிர்வாகி கனக ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி. குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, கட்டுமானத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கணேசன், மாவட்ட நிர்வாகிகள் ராஜன், பத்மநாபன், மணி, வேலுச் சாமி, ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சமூக பாது காப்புத் திட்ட அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.