districts

img

‘வாலிபர் சங்க ரத்ததான கழகத்திற்கு பாராட்டு’

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில், ரத்ததானம் தினம் கருத்தரங்கம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், சிறந்த தன்னார்வ ரத்ததான அமைப்பிற்கான பாராட்டு சான்றிதழை, சேலம் வடக்கு மாநகர வாலிபர் சங்க ரத்ததான கழகத்திற்கு வழங்கினார். வாலிபர் சங்க வடக்கு மாநகரச் செயலாளர் ஆர்.குருபிரசன்னா, மாநகர துணைச்செயலாளர் கே.நாகராஜ் ஆகியோர் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.