districts

முகவர்கள் கமிஷன் விகிதத்தை குறைப்பதா? எல்ஐசி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.4- எல்ஐசி முகவர்களின் கமிஷன் விகி தத்தை குறைக்கும் எல்ஐசி நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  எல்.ஐ.சி. முகவர்களின் கமிசன் விகித அளவைக் குறைப்பதை கண்டித்தும், பாலிசிகள் காலாவதியானால் முகவர்களின் கமிசன் பிடித்தம் செய்யப்படும் என்கிற எல்.ஐ.சி. நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த் தும் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் வியாழனன்று நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஜம்மனை யில் உள்ள எல்ஐசி கிளை அலுவலத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு கிளைத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். ரூபாய் 5 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனத்தை, தங்களுடைய அய ராத உழைப்பால் இன்று 53 லட்சம் கோடி  ரூபாய் சொத்து மதிப்புள்ள நிறுவனமாக  உயர்த்திய முகவர்களின் வாழ்வாதாரத்தை  அழிக்கும் முடிவை சிறிதும் தயக்கமின்றி  எடுத்துள்ளது எல்.ஐ.சி.நிர்வாகம், லாபம்  குறைந்தால் தொழிலாளியின் சம்பளத்தில்  கைவைக்கும் தனியார் முதலாளிகள் போல  நடந்து கொள்கிறது. நிர்வாகத்தின் இந்த நட வடிக்கையை கண்டித்து மாநிலச் செயலாளர்  பி.குமார், மாநில கல்விக்குழு ஒருங்கிணைப் பாளர் பா.ராஜேஷ், வளர்ச்சி அதிகாரி வெங்க டேசன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில் 168 முகவர்கள் கலந்து கொண்டனர்.  முடிவில் கிளைச்செயலாளர் மாலதி நன்றி கூறினார். உதகை இதேபோன்று, எல்ஐசி நிர்வாகத்தை கண்டித்து, உதகையில் அனைத்து எல்ஐசி கிளைகள் முன்பும், லிகாய் அமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஏ.ஜெயக்குமார் தலைமையேற்றார். இதில், முகவர் சங்க நிர்வாகிகள், பிரேம்கு மார், மோகனன் மற்றும் முகம்மது செரிப் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.