districts

img

தோழர்.பி.சுப்பையா அகால மரணம்

தூத்துக்குடி, மே 6-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான பி.சுப்பையா அகால மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடுவிவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்பெ.சண்முகம், சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் உள்ளிட்டதலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துள்ளனர்.தோழர் சுப்பையா கோவில்பட்டியில் லாயல் மில் தொழிலாளியாக வேலைபார்த்த போதே சிஐடியு தொழிற்சங்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும்இணைந்து தீவிரமாக செயல்பட்டார். இதன் காரணமாக பழி வாங்கலுக்கும் உள்ளானார். வேலை நீக்கமும் செய்யப்பட்டார். 

கட்சியின் கோவில்பட்டி தாலுகாக்குழு உறுப்பினராகவும், பின்னர் கட்சியின் கயத்தார் ஒன்றிய செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். நாலாட்டின்புத்தூர் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட செயலாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். சிறந்த ஊராட்சித் தலைவருக்கான விருதையும் பெற்றவர். தற்போது கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். கட்சியின்முடிவுகளை செயல்படுத்துவதிலும், மக்களைத்திரட்டி போராட்டம் நடத்துவதிலும், மக்கள் பிரச்சனைகளில் தலையிடுவதிலும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர். கடந்த மே 2 அன்று இரவுஎதிர்பாராதவிதமாக தீயில் சிக்கி, தீக்காயங்களுக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆறுமுகம், தா.ராஜா, ஆர்.பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.ராமசுப்பு, தி.குமாரவேல், பி.பூமயில், கயத்தார் ஒன்றியச் செயலாளர் எம்.சாலமன்ராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் ஆர்.முருகன், ஒன்றியசெயலாளர் எல்.பி.ஜோதிபாசு, ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலாளர் சி.ரவிச்சந்திரன் உட்பட ஏராளமானோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் திங்களன்று (மே 6) மாலை தோழர் சுப்பையாமரணமடைந்தார். 

இன்று இறுதி நிகழ்ச்சி 

தோழர் சுப்பையா இறுதி நிகழ்ச்சி மே 7 செவ்வாயன்று மதியம் 1 மணியளவில் நாலாட்டின் புத்தூரில் நடக்கிறது.