திருப்பூர் , பிப்.12- திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு சிஐடியு திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் எம்.ராஜகோபால் தலைமை வகித்தார். இதில், சுமைப் பணி தொழிலாளர்கள் நலன், வேலையை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றிட வேண்டும். சரக்கு பரிவர்த் தனை மதிப்பில் 2 சதவிகிதம் பிடித்தம் செய்து, நல நிதி உருவாக்க வேண் டும். தொழிலாளர்கள் கூட்டமாக வேலை செய்யும் இடத்தில் குடிநீர், கழிப் பிட வசதிகள் செய்து தர வேண்டும். மத் திய, மாநில அரசு குடோன்களில், தனி யார் குடோன்களில், டிரான்ஸ்போர்ட் கூட்ஸ்களில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், போனஸ் உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் உண்ணி கிருஷ்ணன், சிஐடியு சுமைப்பணி தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் முத்துச்சாமி உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.