திருப்பூர், அக். 7 - காங்கேயத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம், சென் னைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அக்டோபர் 28 அன்று காங்கேயம் தாலுகவில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு கூட்டம் சனியன்று, தாலுகா குழு உறுப்பினர் இரா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணி கண்டன், காங்கேயம் தாலுகா செயலாளர் எம்.கணேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்த கொண்டனர். இதில், காங்கேயம் தாலுகாவில் தெருநாய்கள், ஆடு களைக் கடித்து கொன்றுள்ளன. பெரும் பகுதி விவசாயிகள் கால்நடைகளை நம்பியே வாழ்கின்றனர். எனவே தெரு நாய்களால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு அரசு இழப் பீடு வழங்க வேண்டும். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு தினசரி நூற்றுக் கணக்கானோர் பயணம் செய்யும் நிலையில், காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து, சென்னைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும். காங்கேயம் பகுதிகளில் காவேரி கூட்டுக் குடிநீர் முறையாக 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்க வேண் டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி அக்டோபர் 28 ஆம்தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் காங்கேயம் தாலுகாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.