districts

பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் தூரத்தில் தள்ளி நிற்கும் பேருந்துகள்

உடுமலை,பிப்.12- உடுமலை அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத் தில் பேருந்துகள் நின்று செல்லாததால், போக்குவரத்து நெரி சல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. உடுமலை நகராட்சிப்பகுதியான யூனியன் ஆபிஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில்  இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு  ஊழியர்கள் குடியிருப்பு, வணிக வளாகம் மற்றும் உடுமலை  மூணார் செல்லும் முக்கிய சாலையில் இருக்கும் ரயில்வே  மேம்பாலம் ஆரம்பிக்கும் குறுகிய சாலையில் பேருந்துகள் நின்று செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை யடுத்து, கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் உடுமலையில் இருந்து செல்லும் பேருந்துகள் எஸ்.என்.ஆர் நகர் நுழைவா யில் எதிராகவும், மூணார், அமராவதி அணை மற்றும் திரு மூர்த்தி மலையில் இருந்து உடுமலை வரும் பேருந்துகள் காமாட்சியம்மன் கோவில் எதிரே நின்று செல்லும்  வகை யில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால் நகராட்சி நிர் வாகம் அறிவித்த இடத்தில் பேருந்துகள் நிற்காமல் பழைய இடத்தில் நின்று செல்வதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் புதிதாக  அறிவித்த இடத்தில் பேருந்து நிழற்குடை அமைத்து,  பேருந்துகளை அந்த இடத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.