சென்னை, ஏப். 24 -பொன்பரப்பியில் தலித் மக்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில் புதனன்று (ஏப்.24) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. அதன் ஒருபகுதி யாக சென்னையில் வி.சி.க. தலைவர்தொல்.திருமாவளவன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கே.பால கிருஷ்ணன் பேசியது வருமாறு:அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாக்குரிமையை தலித் மக்களிடமிருந்து சாதிய சக்திகள் பறித்துள்ளன. அரசியல் ஆதாயத்திற்காக பாமக திட்டமிட்டு பொன்பரப்பியில் சாதிய மோதலை, கலவரத்தை உருவாக்கியது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் சிதம்பரம் பகுதியில் பாமக திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குகிறது. கடந்த20 வருடங்களாக வாக்குச் சாவடி களை கைப்பற்றுவது, வாக்களிக்க விடாமல் விரட்டியடிப்பது தொடர்நிகழ்வாக உள்ளது. இதை சாதியவாத பாமக-தான் செய்கிறது.
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
வேட்பாளர் திருமாவளவனை அவமதிக்கும் வகையில், தலித் மக்கள் முன்னிலையில் பானை சி;ன்னத்தை உடைத்தது சட்ட விரோதம்.இதனை எதிர்த்து கேட்ட தலித் மக்களையும், அவர்களது வீடுகளையும் மதவாத ஆர்எஸ்எஸ் பரிவாரங் களுடன் இணைந்து பாமகவினர் தாக்கியுள்ளனர். வாக்குச்சாவடி களை கைப்பற்றுவோம் என்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கா தது ஏன்? 2016 சட்டமன்ற தேர்தலில் காட்டு மன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஒவ்வொரு வாக்கும் தேர்தல்முடிவை தீர்மானிப்பவை. எனவே தான், தலித் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர். ஆகவே, பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சியரை மாற்றுக
மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வாக்கு பெட்டிகளை வைத்துள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தஅறைகளின் சாவிகளை கருவூலத் துறையில் அதிகாரிகள்ஒப்படைக்காமல் வைத்திருந்திருக் கின்றனர். இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. ஒரு வட்டாட்சியர் தலைமையில் சில அதிகாரிகள் திடீரென அங்கு சென்று ஆவ ணங்களை எடுக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அந்த மாவட்ட ஆட்சியர்தான். ஆகவே, அவரை மாற்ற வேண்டும்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ளவர்கள் எந்த சாதி, மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை. அனைவரும் இணைந்து வாழ விரும்புகிறோம். இந்தியா வில் மத, சாதிய தீவிரவாத சக்திகளுக்கு இடம் தரக்கூடாது. இலங்கை போல் பதறும் நிலை இந்தியாவில், தமிழகத்தில் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
தொல்.திருமாவளவன்
போராட்டத்திற்கு தலைமை தாங்கிப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் , “ஆர் எஸ்எஸ் பரிவாரத்தில் பாமக-வும் இணைந்துள்ளது. வன்முறையே பாமக-வின் ஆத்மாவாக உள்ளது. ராமதாஸ் சாதியை சொல்லி ஏமாற்றுகிறார். பதவி, பணத்திற்காகதனது சொந்த சாதி மக்களையே ராமதாஸ் காட்டிக் கொடுத்துள்ளார். ராமதாஸ் செய்துள்ள அனைத்து வன்முறைக் கலவரங்களும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து செய்யப்பட்டவை. ஆர்எஸ்எஸ் போன்று சமூக உளவியலை அடிப்படை யாக கொண்டு ராமதாஸ் செயல் படுகிறார். வன்னியர்களுக்கு எதிராக தலித்துகளை நிறுத்தி வாக்குபெற முயற்சிக்கிறார். பாஜகவிடம் இருந்து இந்துக்களையும், பாமக-விடம் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களான வன்னியர்களையும் மீட்போம்” என்றார்.இப்போராட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் செயல்தலைவர் ஜெயக்குமார், துணைத்தலைவர் ஆர்.தாமோதரன், மமக தலைவர் ஜவா ஹிருல்லா, மதிமுக தீர்மானக்குழு தலைவர் அந்திரிதாஸ், திராவிட தமிழர் இயக்கப்பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர்கள் கரு.பழனியப்பன், லெனின்பாரதி உள்ளிட்டோர் பேசினர்.