திருவனந்தபுரம்:
கோவிட் வைரஸ் தாக்குதலையொட்டி கேரள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
செவ்வாயன்று காணொலி காட்சி மூலம்நடந்த நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்கலந்துரையாடல் நடந்தது. இதுகுறித்து கேரளமுதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களி டம் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்தும்வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராள மானோர் வரும் நிலையில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மற்றொரு கட்டத்திற்கு கேரளம் சென்றுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எம்பி, எம்எல்ஏக்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விளக்கப்பட்டது. கொள்ளைநோயை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்ற உணர்வைப் பகிர்ந்துகொண்டனர். விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளும் இருந்தன. சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர்உம்மன்சாண்டி, மத்திய அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மூன்று பேர் தவிர மற்ற அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
கோவிட் தீவிரமான பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு தனி அணுகுமுறைக்கான எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிவு ஆராயப்படும். திரும்பி வருபவர்களின் குழந்தைகள் கேரளாவில் பள்ளிப்படிப்பைத் தொடர கடினமாக இருக்காது. மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை துவங்கும்போது நீர்வழி போக்குவரத்தும் பரிசீலிக்கப்படும். மலையாளிகள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்வதற் கான பயண வசதி இல்லாத பிரச்சனை மத்தியஅரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. கூட்டம் நீடித்த நிலையில் மற்றொரு நிகழ்ச்சிக்காக மத்திய அமைச்சர்வி.முரளீதரன் சென்றதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார். விவாதிக்கப்பட்ட அனைத்தையும் கேட்ட பிறகு மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கவேண்டியவற்றை அவர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடுவில் அவர் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால் அது முடியாமல்போனது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது சரியே. கட்சி தலைவர்கள்தான் பேசினர்.
லாக்டவுன் தவறல்ல
மற்ற கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர்,லாக்டவுன் தவறாகிவிட்டது என்கிற நிலைப்பாடு கேரள அரசுக்கு இல்லை என கூறினார்.மத்திய அரசு அறிவிக்கும் முன்பே கேரளத்தில் தீவிர லாக்டவுன் அமல்படுத்தப் பட்டது.ஆனால், அது ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தை சமாளிக்க பயனுள்ள நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். ஐஎம்ஏ-க்கு என்ன நேர்ந்தது என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். சிவப்பு மண்டலத்தில் உள்ளவர்களை இங்கே அனுமதிக்கக் கூடாது என்கிறநிலைப்பாட்டை அரசால் ஏற்க முடியாது. மின்சாரத்துக்கான நிலை கட்டணத்தில் சலுகை வழங்க முன்மொழிவு செய்யப்பட்டது. புகார்கள் அமைச்சரின் கவனத்திற்குகொண்டுசெல்லப்படும் என்றார்.
நோய் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து வருவோரை எச்சரிக்கை யுடன் ஏற்றுக்கொள்வதாகவும், யாரையும் நிராகரிக்கும் கொள்கை இல்லை என்றும் முதல்வர் கூறினார். அவர்களுக்கு முறையானசோதனையும், கண்காணிப்பும் தேவை. அதற்காகத்தான் அரசின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வருகிறவர்களுக்கு மட்டுமல்ல இங்கு உள்ளவர்களின் நலனுக்காகவுமே இந்த பதிவு. இதை தவிர்க்கக் கூடாது. யாருக்கும் பாகுபாடு இல்லை. மாற்று இல்லாததால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால், நடப்புகள் கைமீறிப் போய்விடும். அது சமூக பரவலுக்கு இட்டுச்செல்லும் என்று முதல்வர் விளக்கினார்.
லாக்டவுனில் வெளியே இருந்து மொத்தம்1,12,968 பேர் கேரளாவுக்கு வந்தனர். மொத்தம் 5.14 லட்சம் பேர் பதிவு செய்து ள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வர 3.80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2.16 லட்சம் பேருக்கு பாஸ்வழங்கப்பட்டுள்ளது. அதில் 1,01,779 பேர்கேரளத்துக்கு வந்துள்ளனர். 1.34 லட்சத்திற்கும்அதிகமானோர் வெளிநாட்டிலிருந்து பதிவு செய்துள்ளனர். திங்கட்கிழமை நிலவரப்படி, 11,189 பேர் மாநிலத்தை வந்தடைந்தனர். நோய் அதிக அளவில் பரவக்கூடிய பகுதிகளில் இருந்து மக்கள் வரும்போது, நோயாளிகளின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கும். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 72 பேரும், தமிழகத்தில் இருந்து வந்த 71 பேரும், கர்நாடகத்தில் இருந்து வந்த 35 பேரும் இந்த நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
சொந்த செலவில் தனிமை
வெளிநாட்டிலிருந்து வந்த 133 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்75 பேர் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் 25 பேர் குவைத் நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றுமுதல்வர் கூறினார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கள் சொந்த செலவில் நிறுவன தனிமைப்படுத்தலில் தங்க வேண்டும். இது ஏற்கனவே உள்ளவர்களுக்கு பொருந்தாது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குச் செல்கின்றனர்.லட்சக்கணக்கான மக்கள் வெளிநாட்டி லிருந்து இங்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரது செலவையும் அரசால் தாங்க முடியாது. அவர்கள் தங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக அதைச் செய்ய வேண்டும். பயணச் செலவின் பகுதியாக அவர்களே இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏழை மக்களுக்கு மலிவான தனிமைப்படுத்தல் வசதிகள் இருக்கும் என்றும் இது தொடர்பாக எந்த சிரமமும் ஏற்படாது என்றும். முதல் ஏழு நாட்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் முறையையும், பின்னர் அடுத்த ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் என்கிற முறையை அரசு பின்பற்றுகிறது என்றும் முதல்வர் கூறினார்.