கோவையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சர்வ சிக்சா அபியான் திட்ட கல்வி நிதியான ரூ.573 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி ஒதுக்கப்படும் என்ற போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், மாணவர்களிடம் பிற்போக்கு கருத்துக்களை விதைக்கு ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இன்று தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட குழு சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.