districts

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

சேலம், பிப்.22- ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஆரம்ப சுகா தார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்காக நிழற் குடை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள் ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப் பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு காமலாபுரம், வெள்ளா ளப்பட்டி, தேக்கம்பட்டி மற்றும் செங்கரடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த சுகாதார நிலைய வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் குறைவாக இருப்பதால், நோயாளிகள்  மற்றும் உறவினர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக, பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நோயாளிகள் மற்றும் உறவினர்கள் இளைப்பாற நிழற்குடை அமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.