கோவை சூலூர் அருகே விற்பனைக்காக ரூ1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்குக் கொண்டு வருவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் முத்துகவுண்டன் புதூர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பதேவர் மகன் செல்வம் (45) மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திராய மகன் பிரதீப் (45) ஆகிறார்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், ஒரு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.