districts

img

போதைக்கு எதிராக இளைஞர்கள் உறுதியேற்பு

சென்னை, ஆக. 18- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு அலுவலகத் திறப்பு விழா, போதைக்கு எதிரான பேரணி, கலை விழா என முப்பெரும் விழாவாக  மாவட்டத் தலைவர் ஜி.நித்தியராஜ் தலைமையில் பெரம்பூரில் நடைபெற்றது. முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் வடசென்னை மாவட்டக் குழு அலுவலகத்தை திறந்து வைத்தார். எழுத்தாளர் பாக்கியம் சங்கர் போதைக்கு எதிரான கலை விழாவில் கலந்து கொண்டு பேசினார். மாவட்டச் செயலாளர் எல்.பி. சரவணத்தமிழன்   போதைக்கு எதிரான  உறுதிமொழியை வாசிக்க அனைவரும்   ஏற்றுக்கொண்டனர்.வேலை கேட்டு  அண்மையில் நடைபெற்ற சைக்கிள் பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் கவுரவிக்கப் பட்டனர். முன்னதாக அம்பேத்கர் கல்லூரி அருகில் இருந்து போதைக்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில் மாவட்டப் பொருளாளர் அ.விஜய், மாவட்ட துணைத் தலைவர்கள் ச.முருகே சன், ர.ஸ்டாலின், ஆர்.அபிராமி, மாவட்ட துணை செயலாளர்கள் சா.நீதிதேவன், எஸ்.சுரேஷ், எஸ்.கார்த்திக், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.ஜபருல்லா கான், ஆர்.சுரேந்தர், பெரம்பூர் பகுதிப் பொரு ளாளர் ஆர்.சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.