districts

img

உலக அருங்காட்சியக தினம்: ரயில் அருங்காட்சியகத்தில் குழந்தைகள் குதூகலம்

சென்னை, மே 18- உலக அருங்காட்சியக தினத்தையொட்டி சென்னை ரயில் அருங்காட்சியகத்தை பள்ளி குழந்தைகள் உற்சாகமாக கண்டுகளித்தனர். சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி உற்பத்தி நிறுவனம் சார்பில் நியூ ஆவடி சாலையில் சென்னை ரயில் அருங்காட்சியகம் அமைகப் பட்டுள்ளது. இங்கு முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி என்ஜின், ரயில் பெட்டிகள், சரக்கு பெட்டிகள், செயல் விளக்கத்துடன் கூடிய மின்சார ரயில் இயக்கம், ரயில்வே வரலாறு, 1967ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புறநகர் ரயில் பெட்டிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.  அங்கு வீணாகும் இரும்புப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விலங்குகள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஊட்டியில் இயக்கப்படும் மலை ரயில் போல் இங்கும் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் முதன் முதலில் ரயில்கள் எப்படி இயக்கப்பட்டன, தற்போது அதிநவீன ரயில்கள் இயக்கப்படுவது வரை அதன் முழு வரலாறும் சினிமா வடிவில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த அரங்கில் நுழைவு கட்டணம் 50 ரூபாய்  வசூலிக்கப்படுகிறது.  அதோடு 10 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. உலக அருங்காட்சியக தினம் ஏப்ரல் 18ஆம் தேதி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்  பள்ளிக் குழந்தைகளும், சிறப்பு குழந்தை களும் கலந்து கொண்டு, அங்கு காட்சிப்படுத்தப்பட்ட நீராவி என்ஜின், ரயில் பெட்டிகள், சரக்கு பெட்டிகள், மின்சார ரயில் இயக்கம் உள்ளிட்ட பலவற்றை ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். அங்குள்ள நீராவி என்ஜின். ரயில் பெட்டிகள் மீது குழந்தைகள் ஏறி விளையாடி மகிழ்ந்தனர். சாரண சாரணியரின் பேரணியும் பள்ளி மாணவர்க ளுக்கு  வினாடி வினா போட்டியும்  நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  உலக அருங்காட்சியக தினத்தையொட்டி  துவக்க நாள் மட்டும் பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்திற்குள் இலவச மாக அனுமதிக்கப்பட்டனர்.