districts

கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி

சென்னை, ஏப். 22- மயிலாப்பூர் ஆறுமுகம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (37). இவர் லஸ்  சர்ச் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் அந்த நிறுவன வளா கத்தில் உள்ள கிணற்றை சுற்றிலும் சுத்தம் செய்யும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது  அவர் அந்த கிணற்றின் உடைந்த பகுதி அருகே நின்று கொண் டிருக்கும் போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த உமா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல றிந்த மயிலாப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, உமா சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.