சாத்தூர், ஜூன் 6- சாத்தூர் அருகே கிணற் றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறை யினர் பத்திரமாக மீட்டனர். சாத்தூர் அருகே நத்தத் துப்பட்டியைச் சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான கொய்யாத் தோப்பு உள்ளது. அங்குள்ள காட்டுப் பகுதியில் புள்ளி மான்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் 30 அடி ஆழ முள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அதி காரி கதிரேசன் தலைமையி லான தீயணைப்பு வீரர்கள். புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்பு, திரு வில்லி புத்தூர் வனவர் மாடசாமி, வன காவலர் முத்து ராம லிங்கம் ஆகியேரிடம் ஒப்ப டைத்தனர். பின்பு, கால்நடை மருத்துவர்கள் புள்ளிமா னிற்கு சிகிச்சை அளித்து திருவில்லிபுத்தூர் வனப் பகுதியில் விட்டனர்.