districts

மெரினா கடற்கரையில் வைபை வசதி வழங்க மாநகராட்சி திட்டம்

சென்னை, அக்.3-  மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிக ளுக்கு இலவசமாக வைஃபை வசதி அளிக்க வும் மாநகராட்சி திட்டமிட் டுள்ளது. மெரினாவுக்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக் கையின் அடிப்படையில் இவ்வசதியை வழங்கு வதற்கு ஆலோசித்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகி யோருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஒருமுறை பாஸ்வேர்டு மூலம் 45 நிமிடங்கள் இலவச மாக வைஃபை வசதி வழங்கு வது குறித்து விவாதிக்கப் பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து  வருகின்றனர். ஆசியாவி லேயே 2-வது பெரிய கடற் கரையாக மெரினா இருப்ப தால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இலவச வைபை திட்டத்தை குறைந்த செலவில் செயல் படுத்துவதற்கான கள  ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.