districts

டாஸ்மாக் ஊழியர்களுக்கு  ஊதிய உயர்வு!

சென்னை,ஏப்.26 தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அத்துறைக்கான அமைச்சர் செந்தில் பாலாஜி,  தமிழ்நாட்டில் வாணிபக் கழக சில்லறை விற்பனை நிலையத்தில் (டாஸ்மாக்) பணியாற்றும் ஊழியர்களுக்கு  மாத சம்பளம் ரூ. 500  உயர்த்தி வழங்கப்படும் என்றார். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 6,715 மேற்பார்வையாளர்கள், 15000 விற்பனையாளர்கள் மற்றும் 3090 உதவியாளர்கள், 24 ஆயிரத்து 805 சில்லரை விற்பனையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள் இவர்கள் அனைவரும் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.