விழுப்புரம்,ஜன.20- தமிழ்நாட்டில், சென்னை உயர்நீதிமன்றத்தில் காலி யாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று ஒன்றிய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார். விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் தேசிய சட்டப்பணிகள் ஆணையம், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட உதவி மையம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பி னர் செயலாளர் நசீர் அகமது வரவேற்றார். மாவட்ட ஆட்சியர்கள் மோகன்(விழுப்புரம்), ஷ்ரவன்குமார் (கள்ளக் குறிச்சி), சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சட்டப்பணிகள் ஆணையம் குறித்த சட்ட புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 398 பயனாளிகளுக்கு ரூ.2.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசு கையில், “ இந்தியா வின் பழமையான நீதிமன்றங் களில் சென்னை உயர்நீதி மன்றமும் ஒன்று. இங்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களில் காலி யிடங்கள் உள்ளன. விரை வில் அந்த இடங்க ளுக்கு நீதிபதிகள் நியமிக்கப் படுவர். இதன் மூலம் அனைத்து நீதிபதி பணி யிடங்களும் நிரப்பப் படும்”என்றார். இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திண்டிவனம் சாராட்சியர் கட்டா ரவி தேஜா, நீதிபதிகள், வழக்கறி ஞர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடி வில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா நன்றி கூறினார்.