districts

img

ஐஐடி மாணவி பாலியல் வல்லுறவு வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றுக! தமிழக அரசுக்கு மாதர் சங்கம் கோரிக்கை

சென்னை, மார்ச் 27 - சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) வேதியியல் துறை  ஆராய்ச்சி மாணவியை, பாலியல் வன்முறை, சாதி ரீதியாக அவமதித்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த  பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னை ஐஐடி வேதியியல் துறையில்  ஆராய்ச்சி (பி.எச்டி) செய்து வருகிறார். இதேபிரிவில் ஆராய்ச்சி செய்து வரும்  மாணவர்கள் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் 2017ஆம் ஆண்டிலிருந்து பார்வதியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து புகார் தெரிவித்த பார்வதியை, பேரா.எடமன பிரசாத் சாதி ரீதியாக, அவமானப் படுத்தி, தொடர் தொந்தரவு கொடுத் துள்ளார். இதன்பிறகு, கல்வி வளாகம், ஆய்வுக்கூடத்திலும் வைத்து மாணவி பார்வதியை, கிங்ஷூக்தேப் ஷர்மா இரண்டு முறை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். கல்வி சுற்றுலா சென்ற இடத்தில், கிங்ஷூக்தேப் ஷர்மா, பார்வதியை அறைக்குள் அடைத்து  அந்தரங்க பகுதிகளை செல்போனில் படம் பிடித்துள்ளார். அதைக்காட்டி கிங்ஷூக்தேப் ஷர்மா மற்றும் அவரது நண்பர்கள் பார்வதியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு  வந்துள்ளனர். இந்த தொந்தரவு தாங்காமல், 2020  ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி ஐஐடி உள்புகார் கமிட்டியிடம் பார்வதி புகார் செய்தார்.

இதை விசாரித்து   இடைக்கால அறிக்கையை நிர்வாகத் திற்கு புகார் கமிட்டி கொடுத்தது. அதில், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது. வக்கிரமாக நடந்து கொண்டது  போன்ற அம்சங்கள் உறுதிபடுத்தப் பட்டிருந்தது.  அதன்பேரில், குற்றம் சாட்டப் பட்ட மாணவர்கள் கல்வி வளாகத்திற் குள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனால்,  குற்றவாளிகள் அனைத்து ஆன்லைன்  வகுப்புகளிலும் கலந்து கொண்டிருந்த னர். இதனால் மன உளைச்சல் அடைந்த பார்வதி மூன்று முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), சென்னை காவல் துறை ஆணையர், எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர் உள்ளிட்டோருக்கு பார்வதி புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னர் தேசிய மகளிர் ஆணை யத்திற்கு புகார் அனுப்பினார். புகாரை ஏற்றுக் கொண்ட ஆணையம், வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர காவல்  ஆணையருக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி,  மலாய் கிருஷ்ண மகதோ, முனைவர் ரவீந்திரன், பேரா.எடமன பிரசாத், நாரா யண் பத்ரா, சௌர்வ தத்தா, அயன்  பட்டாச்சார்யா ஆகிய 8 பேர் மீது  ஐபிசி 354, 354பி, 354சி, 506(1) பிரிவுக ளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. வழக்கு பதிந்து 9 மாதங்களாகியும் குற்ற வாளிகள் கைது செய்யப்படவில்லை.

அதிகாரி மீது வழக்கு
இதுகுறித்து மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: முதல் குற்றவாளி மாணவியை 2  முறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள் ளார். முதல் தகவல் அறிக்கையில் பிரிவு  376 சேர்க்கவில்லை. மாணவி தலித்  சமூகத்தை சார்ந்தவராவும், குற்றவாளி கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொதுப் பிரிவைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர். அவ்வகையில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படவில்லை.  தேசிய மகளிர் ஆணையத்திற்கு உறுதியளித்தபடி, காவல்துறை விரைந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. மாணவியை  ஆபாச படம் எடுத்த குற்றவாளிகளின் செல்போனை கூட பறிமுதல் செய்ய வில்லை. ஆகவே, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். மயிலாப்பூர் காவல் நிலைய அதிகாரி விஜித்ரா தனது அடிப்படை கடமையை கூட செய்யாமல், குற்றவாளி களுக்கு சாதகமாக செயல்படுவதால் அவர் மீது 166ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டும். முதல் தகவல் அறிக் கையில் ஐபிசி 376வது பிரிவை சேர்க்க  வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். குற்றப் பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். மாணவியின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும். இது தொடர்பாக டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து  பேச உள்ளோம். உள்புகார் கமிட்டியில் பார்வதி புகார்  செய்த பிறகு, அவரை ஆய்வகத்திற் குள் விடாமல், ரசாயனங்களை தராமல்  பேரா.எடமனபிரசாத் தொடர் தொந்தரவு  (டார்ச்சர்) கொடுத்துள்ளார்.

காவல் துறை வழக்கு பதிந்த பிறகு, உள்புகார்  கமிட்டி விசாரணையை நிறுத்தி விட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது.  உள்புகார் கமிட்டி விசாரணை, துறை  ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கானது. ஆகவே, விசாரணையை நிறுத்தி  வைத்திருப்பது, நிர்வாகம் குற்றவாளி களை பாதுகாக்கிறதோ என்ற சந்தே கத்தை எழுப்புகிறது. மாணவியின் படிப்பை அவசர அவசரமாக முடிக்க  நிர்பந்திப்பது சந்தேகத்தை வலுவாக்கு கிறது. எனவே, விசாரணையை முழுமை யாக முடித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றாவாளிகளுக்கு தடை விதிக்கப் பட்ட நிலையில், கல்வி வளாகத்திற் குள் உலா வந்து மாணவியை அச்சுறுத்து கின்றனர். இந்நிலையில் மாதர் சங்கம் தலையிட்டு, மாணவியை தமிழக மகளிர்  ஆணையத் தலைவரை சந்தித்து  பேச வைத்துள்ளோம். ஆணையமும்  இந்தப் பிரச்சனையில் தலையிட் டுள்ளது. விரையில் ஐஐடி நிர்வாகத் தையும் சந்தித்து பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.  இந்த சந்திப்பின்போது சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில நிர்வாகி பிரமிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.