சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலை வனப் பகுதியில் வெள்ளம் ஏற்படு வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலை வனம் தான் உலகின் மிகவும் வறண்ட பாலைவனமாக அறியப் படுகிறது. சஹாரா பாலைவனம், வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 90 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சஹாராவில் மழை வெள்ளம் என்பது அரிதினும் அரிது. அந்த வகையில் அண்மையில் அங்கு பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலை வனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் கனமழையால் சஹாரா பாலைவனத்தில் ஜகோரா - டாடா மணல் படுகைகளுக்கு இடையே உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இது குறித்து மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரி ஹூசின் யூபெப் கூறியிருப்பதா வது:- “மிகக்குறைவான நேரத்தில் அதிகளவு மழை பெய்து 30 முதல் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. தலை நகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோ யுனைட் கிராமத்தில் பெய்த கனமழை யால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள் ளது. இங்கு 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழைப் பொழிவு பதிவாகி யுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். புவி வேகமாக வெப்பமடை தல் காரணமாக வானிலையில் திடீரென மாறுபாடு ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் இப்பகுதியில் அடிக்கடி நிகழக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதமும் டகோயுனைட் கிராமத்தில் 24 மணி நேரத்தில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் செலஸ்டி சாலோ கூறுகை யில், உலகம் முழுவதும் தண்ணீர் சுழற்சி அதிவேக சீற்றமாக மாறிக் கொண்டி ருக்கிறது. அதாவது, இப்பகுதி யில் நிலவும் காற்றில் வழக் கத்தைவிட ஈரப்பதம் அதிக மாக உள்ளது. இதன் வேகம் ஒரு சீராக இல்லாததால் ஒரு கணிப்பிற்கு வர முடிய வில்லை. இருப்பினும் வேக மாக அதிகரிக்கும் வெப்பம், அல்லது வேகமாகக் குறையும் வெப்பத்தால் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம்” என்றார்.