திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.வி.சேகரனுக்கு வாக்குகள் கேட்டு, அத்திமூர் அடுத்த திண்டிவனம் கிராமத்தில் தெரு முனைக்கூட்டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ரவிதாசன் தலைமை தாங்னார். வட்டார செயலாளர் சிவாஜி, மாவட்ட செயற்குழு பி.செல்வன், பாலமுருகன், உதயகுமார் திமுக நிர்வாகிகள் ஏழுமலை, அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.